ஜூலை 18, 2015

கார்ல் ஸேகனின் "வெளிர் நீலப் புள்ளி"

Carl Sagan was one of the foremost of thought leaders and an exceptionally brilliant Astrophysicist of recent past. His profound reflections on the pale blue dot, a mere dust particle suspended on a faint sun beam, in a photograph taken from a distant voyager, exiting out of Solar system in 1997, has left a lasting and deep impressions in me. I have always wanted to write it as a poem in Tamil; but today ventured to write his speech in Tamil for my own clarity. Hence this share with all of you!

கார்ல் ஸேகனின் வெளிர் நீலப் புள்ளி
(Carl Sagans’ The Pale Blue Dot)

ஓராயிரம் நட்சத்திரப் புள்ளிகளில் ஓர் ஒளிர் நீலப்புள்ளி    அல்ல! அல்ல.. வெளிர் நீலப்புள்ளி
அண்டப் பெருவெளியில் நம்மை நமக்கு உணர்த்தும் பள்ளி
சற்றே நின்றவதானிப்போம் உள்ளி!

இத்தொலை தூர சாதக இடத்திலிருந்து, பூமி கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒன்றாகத் தெரியாது.

ஆனால் நமக்கோ இது வேறு. மறுபடியும் அந்த புள்ளியைக் கவனிக்க! அது இங்கு உள்ளது. அது நம்முடைய வீடு..

அது நாம். அதன் மேல் தான் நீங்கள் அன்பு செலுத்துபவர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், நீங்கள் கேள்விப்பட்டவர்கள், வாழ்ந்து முடிந்த மனித உயிர்கள், வாழ்ந்திருக்கின்றனர்.

ஒட்டு மொத்த மகிழ்வும், துன்பங்களும், ஆயிரக்கணக்கான தாமே நிஜம் என்கிற மதங்களும், கோட்பாடுகளும், பொருளாதாராச் சித்தாந்தங்களும், எல்லா வேட்டையர்களும், தேடுபவர்களும், எல்லா நாயகர்களும், எல்லா கோழைகளும், எல்லா மனித நாகரிகங்களை உருவாக்குபவர்களும், எல்லா அழிப்பவர்களும், எல்லா மன்னர்களும், எல்லா சாதாரணர்களும், காதலிலாழ்பட்ட இருவரும், எல்லா தாய் தந்தையரும், நம்பிக்கையோடிருக்கும் குழந்தையும், கண்டுபிடிப்பாளரும், சோதிப்பாளரும், நல்லறத்தை போதிப்பாளரும், எல்லா ஊழல்மிக்க அரசியல்வாதிகளும், எல்லா பெரிய நட்சத்திரங்களும், எல்லா உச்சத் தலைவர்களும், எல்லா துறவிகளும், எல்லாப் பாவிகளும் -

நம்மனித இனத்தின் சரித்திரத்திலே வாழ்ந்தவர்கள்! –

ஒரு சூரிய ஒளிக்கீற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தூசியின் துகள்!

பூமி அண்டப் பெருவெளியில் ஒரு சிறு மேடை.

தாங்கள் ஒரு சிறிய கணப்பொழுது இந்த சிறிய புள்ளியில் வெற்றியிலும், பெருமையிலும், திளைத்து எஜமானர்களாக  இருக்க, ராணுவத் தளபதிகளாலும், மன்னர்களாலும் சிந்தப்பட்ட குருதி ஆறுகளைப் பற்றி சிந்திப்பீர்.

இந்த சிறிய படப்புள்ளியின் ஒரு மூலையில் வசிப்பவர்களுக்கு, மற்றொரு மூலையில் வேறென்று காணமுடியாது வசிக்கும் சக மனிதர்கள் விஜயம் செய்த கொடுஞ்செயல்களை எண்ணிப்பாருங்கள்.

எத்துணை முறை அவர்களுடைய தவறான புரிதல்கள்? எவ்வளவு ஆர்வம் ஒருவரை ஒருவர் கொன்று கொள்ள?

எவ்வளவு தீவிரம் அவர்களுடைய வெறுப்புகள்? நம்முடைய நிலைப்பாடுகள், நாமாகக் கற்பனைச் செய்துகொண்ட சுய முக்கியத்துவம், இந்த ககனத்திலே, நாம் ஏதோ விசேஷ உரிமை நிலையைப் பெற்றவர்கள் என்கிற மாய நினைப்பு, என்றிவை எல்லாமே இந்த வெளிர் ஒளியின் புள்ளியால் சவால் விடப்படுகின்றன.

சூழ்ந்துள்ள அண்டத்தின் கருப்பு வெளியிலே, நம்முடைய பூமியெனும் கிரகம், ஒரு தனித்தத் துகள்.,

நம்முடைய இந்த ஒரு பொருட்டுமில்லாத் திமிரத்தில், இவ்வளவு அளவிறந்த வெளியில், நமக்கு ஒரு உதவியும் வெளியில் வேறெங்கிருந்து வந்து காப்பாற்றக்கூடும் என்ற கோடிக் காட்டும் குறியீடு கூட இல்லை.

இந்த பூமிதான் ஒரே உலகம் இதுவரை, நம் இனத்து உயிர்கள் குடி பெயர்ந்து வாழ்வதற்கு ஏற்ற இடம்,

குறைந்தளவு, கணிப்பிற்குட்பட்ட அண்மை வருங்காலமென்று நோக்கினும் கூட, வேறெங்கும் வேறெதுவும் இல்லை,  அத்தகைய இடங்களைக் கண்டு பிடித்துச் செல்லலாமா என்றால், ஆமாம் எனலாம். சென்று வசிக்கலாமா என்றால், இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

பிடிக்குமோ பிடிக்காதோ, இப்போதைக்கு பூமிதான் நம் நிலையை நிறுத்தக்கூடிய இடம்!

வானவியல்தான் பண்பைச் செதுக்கும், நம்மை பணிவில் நிறுத்தும் ஒரு அனுபவம் என்கிறார்கள்.

இந்த வெகு தொலை தூரத்திலிருந்து பார்க்கும் பூமிப் புள்ளியின் படத்தை விட மனித அசட்டுத்தனத்தையும், அகந்தையையும் வெளிச்சம்போட்டு காட்ட வேறில்லை,


எனக்கு, இது நாம் ஒருவரோடு ஒருவர் கருணையோடு உறவாட வேண்டியதையும், நமது ஒரே வீடான இந்த வெளிர் நீலப் புள்ளியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதையும், அடிக்கோடிடுவதையே சுட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...