ஜூலை 19, 2015

குறளின் குரல் - 1186

19th Jul, 2015

றைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்த
                           (குறள் 1180: கண்விதுப்பழிதல் அதிகாரம்)

றை பெறல் -  மறைந்துள்ளதை (துன்பத்தை) அறிந்து கொள்ளுதல்
ஊரார்க்கு - இவ்வூரார்க்கு
அரிதன்றால் - கடினமல்லவே
எம்போல் - என்னைப்போல்
அறை பறை - முரசு பறை அறிந்து அறிவிப்பது போன்ற
கண்ணார் - கண்களை உடையவர்களாய் இருப்பின்!
அகத்த - உள்ளத்தில் (முதற் சொல்லோடு கூட்டிப் பொருள் செய்க)

என்னைப் போன்று அகத்தில் உள்ள துன்பத்தைக் காட்டிக்கொடுக்கும் கண்களை முகத்துடையவர்கள் உள்ளத்தில் ஒளிந்த துன்பத்தை அறிந்து கொள்வது இந்த ஊராருக்கு கடினமான ஒன்று அல்லவே! அவ்வாறிருக்கையில், என்னை என் தலைவன் பிரிந்திருக்கிற துன்பத்தை , நான் எவ்வாறு ஊராருக்கு மறைக்கமுடியும் என்று தோழியை வினவுகிறாள் தலைவி. எவ்வளவுதான் முயன்றாலும், தலைவன் பிரிந்துவாடும் அகத்துன்பத்தை அடுத்தவர் அறியாமல் காப்பது எளிதல்ல என்றுணர்த்தி இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்.

Transliteration:
maRaipeRal UrArkku aridanRAl empOl
aRaipaRai kaNNAr agatta

maRai peRal – what is hidden (the pain of separation)
UrArkku – for this town to know
aridanRAl – is not that difficult
empOl – like me
aRai paRai – the announcing drum beat like
kaNNAr – eyes are there
agatta - what is in the heart

With someone like me, that has eyes ready to give me up, revealing what is in my heart very easily, it is easy for the towns people to know the sorrow hidden in my heart. How can I hide the pain of separation from my lover, the maiden asks her friend.Thus vaLLuvar concludes this chapter saying it is impossible for lady separated from her beloved to hide her sadness from others.

“Not impossible for townspeople to know what is in my heart,
 as my eyes reveal, announcing them readily like drum beat”

இன்றெனது  குறள்:

உட்புதைந் துள்ளது ஊரார்க் கரிதன்றே
கொட்டும் பறைபோற்கண் ணால்

uTpudain duLLadu UrArk karidanRE
kOTTum paRaipORkaN NAl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...