ஜூலை 10, 2015

எங்க வீட்டுக் கதை (குழந்தைப் பாட்டு)


எங்கள் வீட்டு ஊஞ்சலிலே
ஏறி நாங்கள் விளையாட
அங்கும் இங்கும் ஆடிடுதே
அழகாய் கீச்சிப் பாடிடுதே

குட்டிப் பாப்பா தங்கச்சி
குனிஞ்சுப் பார்த்துக் கையிரண்டும்
தட்டித் தட்டிச் சிரிக்கின்றாள்
தரையில் எம்பிக் குதிக்கின்றாள்

விச்சு அண்ணா கையாலே
வேகமா ஊஞ்சல ஆட்டிடவும்
வச்சக் கண்ணா வாங்காம
வாசு அண்ணா பார்க்கின்றான்

அப்பா சேரில் உட்கார்ந்து
ஆபீஸ் வேலைப் பார்க்கின்றார்
அப்போ அம்மா அடுக்களையில்
அரிசிச் சோறு வைக்கின்றாள்

தாத்தா பொக்கை வாயாலே
தாவென் றெதையோ கேட்கின்றார்
காத்தா வருவதைப் பார்தங்கே
களுக் குன்னுபாட்டிச் சிரிக்கின்றாள்

விளக்கு வெச்சதும் படிக்கணும்
விளையாட் டெல்லாம் நிறுத்திட்டு
வளவள அரட்டை செய்யாம
வணங்கி அதையும் செய்யணும்

அப்பா ரொம்பக் கண்டிப்பு
அம்மா ஆசை அரவணைப்பு
தப்பா எதுவும் செஞ்சாக்க
தண்டனை உண்டு தப்பாம

நேரத் துக்கு எழுந்திருந்து
நேரத் துக்குத் தூங்கோணும்
ஊரச் சுத்தப் போனாலும்
ஒழுங்கா படிச்சுக் காட்டோணும்

நல்லா படிச்சா போதாது
நல்லப் பிள்ளை நானுன்னு
எல்லா ரும்மே புகழ்ந்தாலே
எங்க வீட்டில் சந்தோஷம்

எங்கள் வீட்டில் மகிழ்ச்சிக்கு
எப்போ தும்மே குறைவில்லை
எங்கே இப்போ சொல்லுங்க

உங்க வீட்டுக் கதையிங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...