ஜூலை 10, 2015

குறளின் குரல் - 1177

118: (Eyes consumed with grief - கண்விதுப்பழிதல்)

[Eyes of a maiden, longing to see her beloved, distressed and perturbed in mind, are blurred in vision with tears that block the vision of the eyes. This is typical of separated maiden that grows pale due to her beloved going away; Eyes play an important role to exchange love between any two intertwined in love, and they convey the longing; and they also convey the hearts pining through wakeful weariness and tears of thought. Hence vaLLuvar has devoted a whole chapter of verses on this.]

10th Jul, 2015

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
                       (குறள் 1171: கண்விதுப்பழிதல் அதிகாரம்)

கண்தாம் - என்னுடைய கண்கள் தாம்
கலுழ்வது - துக்கத்தில் அழுவது (அவரைக் விரைந்து காட்டாமல்)
வன் கொலோ? - எதனைக் கருதி?
தண்டாநோய் - தணியாத நோயாகக் காமத்தையூட்டிய காதலரை
தாம் காட்ட - அவைதாமே எமக்குக் காட்டவேதானே
யாம் கண்டது - நானும் பார்த்தேன்!

என்னுடைய கண்கள்தாமே இத்தணியாக் காமத்தை தந்த என் காதலரைக் காட்டின? இப்போது அவரை விரைந்து காட்டாமல் துக்கத்தில் அழுவது எதனைக் கருதி என்று தலைவன் பிரிவைத் தாளாது பசலையில் வருந்தும் காதற் தலைமகள் அலமந்து கூறுகிறாளாம் தன் தோழியிடம்!! காதலரைக் காட்டிய கண்கள், இப்போது அவரைக் காட்டுந்தொழிலைச் செய்யாமல், அழுவது மட்டுமல்ல, என்னுடைய கண்களை மறைக்கும் நீர்த்திரையும் இடுகின்றன என்பதையும் குறிப்பாலுணர்த்துகிறாள் தலைவி.

Transliteration:

kaNtAm kaluzhva devankolO taNDAnOi
tAmkATTa yAmkaN Dadu

kaN tAm – My eyes
kaluzhva(du) – weep in sorrow (not showing my beloved)
evan kolO – why so?
taNDAnOi – my beloved that gave this incurable malady of lustful desire for him
tAm kATTa – they showed
yAm kaNDadu – for me to see.

Only my eyes showed my beloved to me that gave this incurable malady of lustful desire; Now without showing him to me quickly, why do they weep in sorrow? – laments the maiden in love that has grown plale being separated from her lover. Not only they not show my lover quickly, they also blur my vision with the tear screen, hints the maiden in this verse.

“Why now weep and blur my vision with tear-screen, the eyes that showed
 the one that gave the incurable malady of lustful desire earlier, my beloved?”


இன்றெனது  குறள்:

காட்டி தணியாக்கா மம்தந்த கண்களே
வாட்டத்  தழுவது மேன்?

kATTi taNiyAkkA mamtanda kaNgaLE
vATTat tazhuvadu mEn?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...