ஜூலை 09, 2015

குறளின் குரல் - 1176

9th Jul, 2015

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
                    (குறள் 1170: படர்மெலிந்திரங்கல் அதிகாரம்)

உள்ளம்போன்று - என் உள்ளம்போல
உள்வழிச் - என் காதலர் இருக்கும் இடத்துக்குண்டான வழியில்
செல்கிற்பின் - சென்று அவரைக் காண வல்லதாயின்
வெள்ளநீர் - வெள்ளம்போல் பெருகும் கண்ணீரிலே
நீந்தல மன்னோ - நீந்திக்கொண்டிருக்க (நீந்தித் தத்தளிக்க) தேவையில்லை
என் கண் - என்னுடைய கண்களுக்கு

என்னுடைய கண்களுக்கு, மனத்தினைப்போல் காதலர் இருக்குமிடத்துக்குக் கடுகிச் செல்லமுடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்திலே நீந்தித் தத்தளிக்க வேண்டியதில்லையே, என்று காதலனைக் காண விழைவதைக் கூறுகிறாளம் நாயகி. அதே நேரத்தில் அவள் மனம் அவனிடமே இருப்பதையும் நயம்படக் கூறிவிடுகிறாள்.

Transliteration:

uLLAmpOnRu uLvazhich selgiRpin veLLanIr
nIndala mannOen kaN

uLLAmpOnRu – like my mind
uLvazhich – in path to where my lover is now,
selgiRpin – if it can go and see him
veLLanIr –  flood of tears
nIndala mannO – need not have to swim in that flood
en kaN – my eyes.

If my eyes can travel just like my mind to where my lover is, then they dont have to  swim in the flood of tears and feel miserable, expresses the maiden of her pain and the desire  in this verse. She also conveys that her mind is always with him already.

“If like my mind, they can go forth to my lover
 my eyes don’t have to swim in the flood of tear”


இன்றெனது  குறள்:

உள்ளம்போல் நீங்கியார் மாட்டேகு மாயின்கண்
வெள்ளத்தில் நீந்தவேண் டா

uLLampOl nIngiyAr mATTEgu mAyinkaN
veLLattil nIndavEN DA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...