ஜூலை 08, 2015

ஆறுபடை வீடமர்ந்த – காவடிச் சிந்து..

அண்ணாமலை ரெட்டியாரின் அழகான காவடிச் சிந்தான "அழகு தெய்வமாக வந்து" எனக்கு ஊந்தூக்கியாக இருந்து கீழுள்ள காவடிச் சிந்தினை எழுத வைத்தது, இரண்டு நாளைக்கு முன்பு.. கவியன்பர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்குமே இது அர்ப்பணம்!
ஆறுபடை வந்தமர்ந்த ஆறுமுக வேலவனார்
ஆறுதலை தந்தளிக்கும் நாதர் - அவர்
அழகுவள்ளி தேவயானை காந்தர் - உமை
அரனார்மகன் மயில்மீதினில்
அழகாய்நடம் புரிந்தே வரும் -அமலாதிபன்
ஆனைமுகர் போற்றும் சீரன் - அய்யன்
அமரர்குலம் காத்த தீரன்
குன்றுதோறும் குமரன்நின்று கூடுமன்பர் குறைகள்தீர்ப்பார்
குஞ்சரிமணாள வடிவேலர் - சேவல்
கொடியுடையோர் - குணசீலர் - அருள்
கொடையார் உளமர்ந்தார் எனை
கவியாலவர் அணைந்தார் நிதம் - கருணணைபுரி
கந்தனெனும் பெயரில் வந்து - எந்தன்
கலிவினை தீரும்பதம் தந்து
செந்தூர்பரங் குன்றமுடன் ஆவினன்குடி வேரகம்
வெந்தணிகை பழமுதிர் சோலை - வாழும்
சொந்தன்கையில் துள்ளிவரும் வேலை - நாளும்
சிந்தித்திரு வந்தித்திரு
சிந்திக்கெடும் முந்தைவினை - மோதம்தர
சிந்தையிலே வந்திடுமே ஞானம் - அவனை
சந்தமுடன் பாடிடுவோம் கானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...