ஜூலை 25, 2015

குறளின் குரல் - 1192

25th Jul, 2015

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கு அற்றம் பார்க்கும் - தீபம் அணையும் நேரத்தைக் கண்டு சூழுகின்ற
இருளே போல் - கருமைப் படர்ந்த இருளை போல
கொண்கன் - கணவர், அன்பர்
முயக்கு அற்றம் பார்க்கும் - கூடியிருக்கும் நேரம் முடிவுறக் கண்டு படருமே
பசப்பு - பசலை நோயானது.

விளக்கின் ஒளி குன்றி தீரும் நேரத்தில் வருகின்ற கருமைப் படர்ந்த இருள் போலவே, என் அன்பர் என்னோடு கூடி அணைத்து அது முடிவுறும் நேரத்தில் என்னைப் படருதே இப்பசலையென்னும் நோய், என்கிறாள் காதற்தலைவி.  இக்குறளில் பசலையென்பது, தன் தலைவன் அணப்பு நீங்கக் காத்திருந்து, மேல் படர்ந்து, தன் ஒளியைக் குன்றச் செய்கிறது என்கிறாள், காதற்தலைவி.


Transliteration:

viLakkaRRam pArkkum iruLEpOl koNkan
muyakkaRRam pArkkum pasappu.

viLakk(u) aRRam pArkkum – For the end of light in a lamp
iruLE pOl – as the darkness awaits
koNkan – beloved, husband
muyakk(u) aRRam pArkkum – for the end of his embrace
pasappu – (awaits) the loss of luster (to spread over)

As the darkness awaits the light of the lamp to dim and fade out, so does this disease of loss of luster on my body , waiting for my beloved husbands’ embrace to be over. She implies that disease of “pasalai” diminishes her brightness to dim and makes her go pale and that would not be there as long as she was in her beloved’s embrace.

“Darkness awaits the light to dim and fade out; for the end of embrace
 of the beloved, awaits of the paleness to spread over and embrace”

இன்றெனது  குறள்:

ஒளிதீர்ந்து ஏகும் இருள்போலே அன்பர்
களிதீர்ந்து ஏகும் பசப்பு

oLitIrndu Egum iruLpOlE anbar
kaLitIrndu Egum pasappu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...