ஜூலை 24, 2015

குறளின் குரல் - 1191

24th Jul, 2015

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

உவக்காண் - அங்கே காண்க
எம் காதலர் - என்னுடைய காதலர்
செல்வார் - என்னை நீங்கிச் செல்லுகையில்
இவக்காண் - இங்கே காண்க
என் மேனி - என் உடலானது
பசப்பூர்வது - பசலைப் பூத்ததே!

அதோ அங்கே பாருங்கள் என் காதலர் என்னை நீங்கிச் செல்லுகிறார். அதே நேரத்தில் இங்கே காண்க, என் உடலானது பசலைப் பூத்துவிட்டது அதற்குள்ளாக. அவர் திரும்பி வருமளவுக்கும் நான் எவ்வாறு ஆற்றுவேனோ என்று பொருள் தருமாறு உள்ளது அவள் சுட்டிச் சொல்வது.

காதலன் நீங்கப் பசலைப்பூத்ததை தம் தோழிக்குச் சொல்லும் குறுந்தொகை வரிகளும் உண்டு.
“இனிச்சென்றனனே இடுமணற் சேர்ப்பன்
 யாங்கறிந் தன்றுகொல் தோழிஎன்
 தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே”

Transliteration:

uvakkANen kAdalar selvAr ivakkANen
mEni pasappUr vadu

uvakkAN – See there
en kAdalar – my lover
selvAr - is going away
ivakkAN – and see here
en mEni – my body
pasappUrvadu – has already got the shallowness

Look there! My lover is leaving me; at the same time, see here, my body has lost its luster and become shallow. She probably implies her concern as to how she is going to bear till his return.

“Look there! My lover is leaving! and see here! already
luster is lost and has shallowness spread over my body”


இன்றெனது  குறள்:

அங்குபார் என்னன்பர் நீங்கிட என்மேனி
இங்கே பசலையூ ரும்

angupAr ennanbar nIngiDa enmEni
ingE pasalaiyU rum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...