ஜூலை 23, 2015

குறளின் குரல் - 1190

23rd Jul, 2015

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

உள்ளுவன்மன் யான் - நான் நினைப்பது அவர் பற்றியேதான்
உரைப்பது அவர் திறமால் - சொல்வதும் அவருடைய நல்ல திறங்களை
கள்ளம் பிறவோ - வஞ்சனை செய்கிறதே (அவ்வாறிருந்தும்)
பசப்பு - பசலை நோய்..

நான் என்னவோ அவர் பற்றிய நினைவோடுதான் உள்ளேன்! அவருடைய நல்ல திறங்களைப் பற்றித்தான் பேசவும் செய்கிறேன். இவையெல்லாம் அவர் என்னிடம் நீண்டு பிரியேன் என்று கூறிச் சென்றதால் ஏற்பட்ட நம்பிக்கையில்!. உள்ளத்தில் அந்நம்பிக்கை இருப்பினும், இந்த பசலையாம் பொலிவிழத்தல் ஏனோ என்னைப் வஞ்சித்து என்னைப் படர்ந்ததே! என்று தோழியிடல் காதற் தலைவி புலம்புகிறாளாம். அதாவது மேலோட்டமாக நம்பிக்கைக்கொண்டிருந்தாலும், அவள் ஆழ்மனத்தில் பிறிவாற்றமையே மிக்கிருப்பதால் பசலை வந்ததென்றும், அதையும் அவள் பசலையே வஞ்சித்தது என்றும் நினைப்பதாகக் கூறும் குறள்.

என்னத்தான் கொண்டு கூட்டிப் பொருள் செய்தாலும், மற்றவர்கள் உரையொட்டியே இவ்வுரையும் எழுதப்பட்டாலும், இக்குறள் இவ்வதிகார நிரப்பியாகவே படுகிறது.

Transliteration:

uLLuvan manyAn uraippadu avartiRamAl
kaLLam piRavO pasappu
uLLuvanman yAn – Always thinking about him
uraippadu avar tiRamAl – Always speak highly about his worth
kaLLam piRavO – But deceitfully abandoned
pasappu – this shallowness.

I am only thinking about him always and also speak highly of his worth and virtues; all this because of the faith that he separation would not prolong. Though that faith is still in tact, this shallowness has deceitfully come over me, laments the maiden to her friend. Though she superficially has that faith, deep in her heart, she probably is not able to bear the separation and hence is affected by shallowness and also thinks that shallowness has deceived her.

However much, an attempt is made to make sense out of this verse, as writte, the commentary itself sounds shallow and the verse seems a mere chapter filler.

“My thoughts are about him; also I speak of his excellent merits
 Why then this shallowness deceives me, and ruin my spirits?


இன்றெனது  குறள்:

எண்ணமும் சொல்வதும் என்னவர் நற்றிறம்
உண்ணலேன் வஞ்சப் பசப்பு?

eNNamum solvadum ennavar naRRiRam
uNNalEn vanjap pasappu?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...