22nd Jul, 2015
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
சாயலும் - அழகு என்பது பொதுப் பொருள்
(மென்மை, பெண்மை என்பார் மணக்குடவர்)
நாணும் - நாணம், வெட்குதல் (இது பழிக்கு நாணுதலையே குறிக்கும்)
அவர் கொண்டார் - அவர் என்னிடமிருந்து பரித்துக்கொண்டு
கைம்மாறா - அதற்கு மாறாக
நோயும் - காமமென்னும் நோயும்
பசலையும் -அதனால் வரும் பசலையும்
தந்து - தந்துவிட்டார் (இப்போது என்னை நீங்கிச் சென்றதால்)
இக்குறளில் சாயல் என்பதற்கு பெரும்பாலான உரையாசிரியர்கள் பரிமேலழகர்
அடியொட்டி, அழகு என்றே பொருள் செய்கின்றனர். மணக்குடவர் அதை மென்மை என்று கூறி, அதுவே
பெண்மை என்றும் கூறுகிறார். இதுவும் ஒருவிதத்தில் பொருந்துவது, எனெனில் காதலன், காதலியின்
பெண்மையைக் கவர்ந்துகொள்வதால்தான் அவள் நாணத்தையும் இழக்கிறாள். நாணம் என்பதும் பழிக்கு
அஞ்சுதலையே குறிக்கும், தன்னைக் காதலிக்கும் ஆணிடம் பெண் வெட்குவது என்பதை அல்ல என்பதையும்
உணரவேண்டும். வெட்கத்தைத் துறக்காமல் கலவி ஏது? தவிரவும் ஆசை வெட்கமறியாது அல்லவா?
காதலியிடமிருந்து அவளது பெண்மை என்னும் அழகையும், அவள் கொண்ட
ஆசையின் காரணமாக வெட்கத்தையும் காதலன் எடுத்துக்கொண்டானாம். அதற்கு மாறாக, அவளுக்கு
குன்றாக் காம நோயையும், அவளை நீங்கிச் சென்றதால் நிறப் பொலிவை இழக்கும் பசலையையும்
தந்துச் சென்றானாம் அவன்.
காதலன் காமநோய் தந்து செல்வதை பிற இலக்கியங்களும் பாடியிருக்கின்றன.
“ஆய்மலர் உன்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே” என்று ஐங்குறுநூறு
(242:4.5)
“அரிமதர் உண்கண் பசப்பநோய் செய்யும் பெருமாள்” என்று கலித்தொகை
(82:20.21) காட்டுகின்றன.
Transliteration:
chAyalum nANum
avarkoNDAr kaimmARA
nOyum pasalaiyum
thandu
chAyalum – the
feminine beauty or comeliness
nANum – and the
modesty (and be fearful shame)
avarkoNDAr – he has
snatched from me
kaimmARA – in return
nOyum – the
disease of lustful desire (for conjugal pleasure)
pasalaiyum – the loss
of shine or luster because of that desire
thandu – having
given
The word “ChAyal” has been intepreted by most
commentators based on Parimelazagars’ which interprets it as just “beauty”.
MaNakkuDavar interprets it as “softness” or “comeliness of femine beauty”. Both make sense, because if the lover takes
away his maidens’ femine innocence she loses her modesty and gives herself
fully without being shy; Without that loss of modesty, there is no possibiity
of conjugal relationship between a man and a woman. The modesty is being
fearful of shame in the public eye. Here the shame pertains to what the
townspeople would speak on their relationship.
Desire overcomes that modesty and sense of shame in a way.
Having taken away both her feminine comeliness and the
modesty, and having pushed her in pain of separation, he has given her the
lustful desire as well as the loss of her luster (pasalai)
“My lover took away my comeliness and
modesty; In return
has left me with disease of lust and loss of
luster and shine”
இன்றெனது குறள்:
பொலிவொடு
வெட்கமும் கொண்டார் பசப்பும்
நலிநோயும்
நல்குவார் நன்கு
polivoDu
veTkamum kONDAr pasappum
nalinOyum
nalguvAr nangu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam