ஜூலை 21, 2015

குறளின் குரல் - 1188

21st Jul, 2015

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

அவர் தந்தார் - என்னுடைய காதற் தலைமகன் தந்தார்
என்னும் தகையால் - என்கிற பெருமையில்
இவர் தந்து - விரும்பி அதை எனக்கு தந்து
என் மேனிமேல் - என்னுடைய உடம்பின் மீது
ஊரும் - ஊருகிறதே
பசப்பு - பசலையென்னும் நிறமாற்றம்

இந்த பசலையானது விரும்பி எனக்கு தானே விரும்பி ஏகி, என் காதற் தலைமகன் தன்னுடைய பிரிவினால் இதை எனக்குத் தந்தார் என்ற பெருமையில, படர்ந்திருக்கிறது என்கிறாள் தலைவி, இக்குறளில். இவர் தந்து என்பதை விரும்பித் தந்து என்று கொள்ளவேண்டும். பசலைப் படர்வது இன்றும் நடக்கும் உண்மையாயிருந்தாலும், பெண்களின் எண்ண வெளிப்பாடுகளும், காலத்தால் மாறி வந்துள்ளன. இன்னும் சில பத்தாண்டுகளில், இதுபோன்ற சொற்கள் கல்வியில் கற்கக்கூடியனவாக மட்டுமே இருக்கலாம்.

Transliteration:

avartandAr ennum tagaiyAl ivarthanden
mEnimEl Urum pasappu

avar tandAr -  My lover gave it to me
ennum tagaiyAl – in that pride
ivar thand(u) – willingly gave
en mEnimEl – over my body
Urum - creeps
Pasappu – this disease of paling in color.

This disease of paling in color, is creeping over me, in the pride that my own lover gave it to me, says the maiden in love. While the paling of color is still a reality, even today, during the separation of the loved one for a lady, the society has changed the mindset of women mostly and in a few decades, some of these words will only remain as academic interest.

“In pride that my own lover gave it to me
 this paling disease creeps all over free!”


இன்றெனது  குறள்:

விரும்பியென் மேனிமேல் காதலர் தந்த
பெருமையில் ஏகும் பசப்பு

virumbiyen mEnimEl kAdalar tanda
perumaiyil Egum pasappu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...