ஜூலை 17, 2015

குறளின் குரல் - 1184

17th Jul, 2015

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
                       (குறள் 1178: கண்விதுப்பழிதல் அதிகாரம்)

பேணாது - எங்களிடையேயான காதலைக் காவாது (வெறும் சொல்லளவில் மட்டுமிருத்தி)
பெட்டார் - என்னுடைய காதலர் (பகைவர் என்றும் பொருளுண்டு..)
உளர் மன்னோ - இருக்கிறார் அல்லவா?
மற்று - ஆயினும்
அவர்க் காணாது - அவரைக் காணாமல்
அமைவில கண் - அமைதியின்றி நோதலுற்றன என்னுடைய கண்கள்.

நம்மை வேண்டாது சென்றவரைக் காணாமல் இக்கண்கள் நோகின்றதே என்று புலம்புகிறாள் காதற்தலைவி இக்குறளில். அவர் எங்களிடையேயான காதலை பொருட்படுத்தாது, காவாது, வெறும் சொல்லளவில் மட்டும் காதலைக் காட்டி, இன்று பிரிந்து சென்றவர் உள்ளாரன்றோ? அவர்மேல் கோபமும், வெறுப்பும்தானே இக்கண்கள் கொள்ளவேண்டும்? ஆனால் இவையோ நொந்து, அமைதியிழந்து வருந்துகின்றனவே! என்கிறாளாம் தலைவி.

பெட்டார் என்ற சொல் நட்பு, காதலர் மற்றும் பகைவர் என்று வெவ்வேறுவிதமாகப் பொருள்படும். காதலித்து, பின் பெண்ணின் காதலுக்குப் பிரிவின்மூலம் தற்காலிகமாகப் பகையாக ஆனதால், வள்ளுவர் பெட்டார் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாகத் தோன்றுகிறது.

பின்னால் வரப்போகும் புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தின் கண், இதே பொருளில், “பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்” என்று எழுதியுள்ளார் வள்ளுவர். திருவாய்மொழிப் பாடலொன்றும் இக்குறளின் கருத்தையொட்டியதே! அப்பாடல்

“கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்த னாகிலும்
கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கும்” (திருவாய் மொழி, 5.3:5)

Transliteration:

pENAdu pETTAr uLarmannO maRRavark
kANAdu amaivila kaN

pENAdu – not caring about the love between us (just expressing only in words)
pETTAr – my lover
uLar mannO – isn’t he there?
maRR(u) – despite that
avark kANAdu – not seeing him
amaivila kaN – my eyes are restless and painful

Rejecting my company, he has gone away, but eyes are in painful gaze looking his return way, laments the maiden here. He did not care for the love between us; Only in words his love was; not in action! Should my eyes not be angered or remorseful in disgust? But they are painful and restless looking for his return.

The word “peTTAr” means all of the following, viz., friend, lover and an enemy in the lexicon. Perhaps to imply the lover that has gone away has become a temporary enemy for the love itself, the poet has used this word specifically.

An exactly similar verse is in a later chapter called “puNarchi vidumbal”, expressing the same thought. Another poet in a  verse in ThiruvAimozhi says though Krishna is an elusive charmer, my heart is always with him”

 “His love is but a lip service; he is there, not protecting it!
 But my eyes, not seeing him are restless, in pain, despite”


இன்றெனது  குறள்:

காதலைக் காவாதா ராயினும் என்கண்கள்
நோதலென் தூக்க மொழிந்து?

kAdalaik kAvAdA rAyinum enkaNgaL
nOdalen tUkka mozhindu?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...