ஜூலை 16, 2015

குறளின் குரல் - 1183

16th Jul, 2015

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
                       (குறள் 1177: கண்விதுப்பழிதல் அதிகாரம்)

உழந்து உழந்து - பிரிவாற்றாமையில் வருந்தி வருந்தி (காதலன் நினைவாகவே)
உள் நீர் அறுக - கண்களில் கண்ணீர் எல்லாம் வற்றட்டும்
விழைந்து இழைந்து வேண்டி - அவரையே விரும்பி, அவரைக் காண நெகிழ்ந்து, வேண்டிப்பெற்ற
அவர்க் கண்ட கண் - அவரையே கண்ட என் கண்கள்!

காதற்தலைவி, மீண்டும் தன் கண்களை, “வேண்டும் உனக்கு நன்றாக வேண்டும்” என்று கூறுகிறார் போன்ற குறள். கண்களே! நீங்கள் தாமே அவரை காண விரும்பி, உருகி, வேண்டி பின்பு அவரைக் கண்டீர்கள்! இன்று அதற்கு தண்டனையாக நீங்கள் வருந்தி வருந்தி கண்ணீர் முற்றிலும் வற்றிப் போகக் கடவது” என்று சபிப்பதுபோல் கூறுகிறாளாம் அவள்.

Transliteration:

Uzanduzand duLnIr aRuga vizhaindizhaindu
vENDi avarkkaNDa kaN

Uzandu uzandu – Feeling utterly miserable being separated from the lover
uL nIr aRuga – may you dry up without anymore tear drop
vizhaind(u) izhaindu vENDi – desiring, melting and wanting (to see and be with him)
avark kaNDa kaN – the eyes that gazed him

The maiden once again curses her eyes to become dry and devoid of tears, which is reflected in this verse. She says, “You deserve this eyes. After all you were the ones who desired, melted, and wanted to see my lover. You deserve to dry up, weeping till the last drop of tears in your eyes and so be it”.

“Feeling miserable, O! Eyes, may you dry up completely!
 After all you desired, melted, wanted to see him willfully!


இன்றெனது  குறள்:

வருந்தியே கண்ணீரும் வற்று! அவரை
விரும்பி நெகிழ்ந்தகண் ணே!

varundiyE kaNNIrm vaRRu! Avarai
virumbi negizhndakaN NE!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...