ஜூலை 15, 2015

குறளின் குரல் - 1182

15th Jul, 2015

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
                       (குறள் 1176: கண்விதுப்பழிதல் அதிகாரம்)

ஓஒ இனிதே - நன்றாய் வேணும்! நன்றே இது! (என்னுடைய இக் கண்களுக்கு)
எமக்கு இந்நோய் - எனக்கு இந்த காமத்துழன்று வருந்தும் நோயை
செய்த கண் - செய்த என்னுடைய கண்கள் (என் காதலரைக் எமக்குக் காட்டியதால்)
தாஅம் - தாமும்
இதற்பட்டது - வருந்தியின்று அழுது கண்ணீர் சொரிகிறதன்றோ?

காதலியின் வருத்தத்தைச் சொல்லுகையிலும், வள்ளுவரின் மெலிய நகைச்சுவை வெளிப்படுகிறது இக்குறளால். தன் கண்களையே ஒருவள், “நன்றாக வேண்டும் இக்கண்களுக்கு” என்று பழி தீர்த்த உணர்வோடு சொல்லுவதாக ஒரு குறள். என்னுடைய இக்கண்கள் இன்று காதலன் பிரிவாற்றாமையைத் தாங்காது அழுகின்றன. “நன்றாக வேண்டும், இத் தண்டனை கண்களுக்கு! அவைதாமே என்னுடைய காதலரைக் காட்டி, நான் அவரைப் பிரிந்து இன்று வாடும் காம நோய்க்கே காரணமாயின”, என்று காதற்தலைவி கூறுகிறாளாம்!

Transliteration:

OO inidE emakkinnOi seidakaN
tAam ithaRpaT Tadu

OO inidE – O! It is really good! (my eyes deserve this punishment)
Emakk(u) innOi – this disease of lust
Seida kaN – that these eyes gave to me
tAam – they themselves (the eyes)
ithaRpaTTadu – pay for that by crying

VaLLuvar employs a light humor in this verse, to say the sorrow of the maiden in disease of lust during her lovers’ separation. She says,”These eyes deserve this punishment of crying”, she declares with a tone of vengeance.

“They only showed my lover, who has gone away today, giving me this pain of the lust. For keeping me in this miserable state, they deserve to cry” she says, as if she has seen a retribution with tears in her eyes.

“It is good that my eyes cry and tear now! They deserve it
 After all, they are the ones that kept me in unbearable lust”


இன்றெனது  குறள்:

நன்றேயிக் காமம்செய் கண்கள் வருந்திதாமும்
இன்று அழுதலன் றோ?

nanREyik kAmamsei kaNgaL varunditAmum
inRu azudalan RO?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...