14th Jul, 2015
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
(குறள் 1175: கண்விதுப்பழிதல் அதிகாரம்)
படல் - உறங்குல்
ஆற்றா
- செய்யாத (இயலாத)
பைதல் உழக்கும் - துன்பத்தைத் தந்தழிக்கும்
கடல்
- கடலளவன்ன
ஆற்றாக்
காமநோய் - தீராக்காமம் நோயினை (பசலையால் நோயென்றே
கூறல் வழக்காயிற்று)
செய்த
என் கண் - என் காதலரைக் எனக்குக் காட்டி செய்த என்னுடைய கண்கள்!
படல் என்ற சொல்லுக்கு உறக்கம்
என்ற பொருள் அகராதிகளில் காணப்பெறவில்லை. ஆயினும் மணக்குடவர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்கள்,
அடிவழியொட்டி பிறரு அவ்வாறே பொருள் கொண்டிருப்பதால், ஏதோ ஒரு நிகண்டுவில் இந்த பொருள்
இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. படல் என்பதை முன்போர் அதிகாரத்தில் கூறியவாறு,
மடல் என்று கொண்டால், பனை ஓலையைக் குறிக்கும் சொல்லாகும். தலைவன் தனக்காக படலூர்ந்து படும் துன்பம்
போல தாங்கொணாது துன்பம் என்றும் கொள்ளலாமோ என்றே
தோன்றுகிறது.
மற்றவர் வழி நின்று பொருள்
செய்தால், தூங்குதற்கு இயலாத துன்பத்தை தந்து அழிப்பதாம், கடலளவும் சிறிதாமெனத் தோன்றக்கூடிய
காம நோயை எனக்குத் தந்த என்னுடைய கண்கள் என்று காதற்தலைவி புலம்புகிறாள்.
தலைமகன் தனக்காக படலூர்ந்து
படும் துன்பம் போன்ற தாங்கொணாத் துன்பம் தந்தழிக்கும், கடலும் சிறிதே என்னும் படியான
தீராக் காம நோயை எனக்குத் தந்த காதலரைக் காட்டிய என்னுடைய கண்கள், என்று காதற்தலைவி வருந்துவதாகவும்
கொள்ளலாம்.
Transliteration:
paDalARRA paidal uzhakku kaDalARRAk
kAmanOi seidaen kaN
paDal
– to sleep
ARRA
– not able to
paidal uzhakku – gives misery to destroy
kaDal
– more than the extent of ocean
ARRAk kAmanOi – the pain due to disease of incurable and
unbearable conjugal desire
Seida en kaN – the eyes that showed my lovers and gave me that
state
There is no word Tamil dictionary that gives the
meaning of sleep for the word “paDal”. However commentators such as
maNakkuDavar and Parimelazhagar have probably used other references to
interpret as such and following them, also the later commentators. The word
also means, the palmyra leaf. We can infer this to be the pain her lover goes
through riding the palmyra horse as seen in an earlier chapter.
We can interpret the verse following the steps of
others: the eyes that showed my lover to me and gave me this incurable and
unbearable disease of conjugal lust that is more than the extent of an ocean,
give me sleepless nights and the pains of such a state.
The maiden, suffers the pain simiar to her lover
riding the palmyra horse; Even for the ocean to feel small, the pain of
incurable disease of lust, these eyes of mine have given to me - laments again
the maiden.
“The
unbearable lust, more the extent of an ocean
these eyes, that are in sleepless pain, have
given”
இன்றெனது
குறள்:
தூங்காமல் துன்பத் துழற்றும் கடலினும்
தீங்காய்கண் செய்காம நோய்
tUngAmal
tunbat tuzhaRRum kaDalinum
tIngAikaN
seikAma nOi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam