ஜூலை 13, 2015

குறளின் குரல் - 1180

13th Jul, 2015

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
                       (குறள் 1174: கண்விதுப்பழிதல் அதிகாரம்)

பெயல் ஆற்றா - அழுது பொழிதலும் இயலாது
நீர் உலந்த - கண்களில் கண்ணீர் வற்றியதே
உண் கண் - காமம் உண்ட கண்களில்
உயல் ஆற்றா - உய்யவே முடியாமல்!
உய்வில் நோய்  - அந்த உய்வதற்கு அரிய காமத்தை
என்கண் நிறுத்து - என்னுடைய கண்ணிலே நிறுத்திவிட்டு

உய்வதற்கு இயலாத காம நோயை என்னுடைய கண்ணிலேயே நிறுத்திவிட்ட, என் காதலர் எழிலைப் பருகிய என்னுடைய கண்கள், இன்று அழுது பொழியவும் இயலாமல் கண்ணீர் வரண்டு நிற்கின்றனவே, என்று மீண்டும் புலம்புகிறாள் காதற்தலைவி.

சென்ற குறளில் அழுவதாகச் சொல்லப்பட்டக் கண்கள் இக்குறளில்  அழுவதற்குமேலாது வற்றியதாகக் கூறுவது முரணாகத் தோன்றலாம். ஆனாலும் கண்ணீரும் வற்றாத வாரிதியா என்ன? அழுது வற்றி அழுதற்கு இயாலாத நிலையைக் கூறுகின்றன. அழுதாலாவது மனவிறுக்கம் குறையும்; அது அவ்விறுக்கமும் குன்றாத கடினமான நிலையாகும்.

Transliteration:

peyalARRA nIrulanda uNkaN uyalARRA
uivilnOi enkaN niRuttu

peyal ARRA – not even able to pour
nIr ulanda – dried tears
uN kaN – the eyes that devoured my lovers presence
uyal ARRA – not to able to escape
uivil nOi – the incurable disease of desire
enkaN niRuttu – fixing in my eyes

Fixing the incurable desire to be with my lover, my eyes are not even able to pour tears and have dried up completely, laments the desire-struck maiden.

It may seem that what this verse says is quite contradictory to the previous verse; but after all, eyes are not pertual reservoirs of tears. Here, he only points to even worse state of not even able to cry which is more painful. In distress and sadness if somebody cries, at least the pain in the heart would ease; here the maiden does not even have that luxury.

“Giving the incurable desire in my eyes to be with my beloved,
 and having cried for long, the eyes that devoured have dried”


இன்றெனது  குறள்:

காமமுண் கண்ணுய்ய லாற்றாநோய் தந்தின்று
தாமழல் அற்றுலர்ந் தற்று 

(காமம் உண் கண் உய்யலாற்றா நோய் தந்து இன்று தாம் அழல் அற்று உலர்ந்தற்று)

kAmamuN kaNNuyya lARRAnOi tandinRu
tAmazhal aRRularn daRRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...