ஜூலை 12, 2015

குறளின் குரல் - 1179

12th Jul, 2015

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
                       (குறள் 1173: கண்விதுப்பழிதல் அதிகாரம்)

கதுமெனத் - விரைந்து
தா நோக்கித் - தாமே முன்பு காதலரை நோக்கி
தாமே கலுழும் - இன்று அவன் பிரிவாற்றாது அழுகின்ற
இது - இந்த கண்களானவை
நகத் தக்கது உடைத்து - நகைப்புக்குரியவை

முன்பு தம் காதலரைக் காண விழைந்து தாமே விரைந்த இந்த கண்கள் அவது பிரிவாற்றாது, தாமே அழவும் இப்போது செய்கின்றன. இது மிகவும் நகைப்புக்குரியது; எள்ளத் தக்கதன்றோ? என்று கண்களைக் குற்றஞ் சொல்லி, தன் ஆற்றாமைக்குக் காரணம் தேடுகிறாள் காதலி.

Transliteration:

Kadumena tAnOkki tAmE kaluzhum
Idunagat takka tuDaittu

Kadumena - quickly
tA nOkki – on their own earlier eagerly glanced my lover (says the maiden)
tAmE kaluzhum –Today they weep unable to bear the separation.
Idu – these eyes
nagat takkat(u) uDaittu – are worthy of being ridiculed.

Earlier hurried to look at my lover (says the maiden), these eyes are, now unable to bear his separation, and weep today. Is n’t it laughable to see that? – the maiden blames her eyes, expressing her sorrw this way.

“Earlier my eyes hurried on their own to glance him, my beloved lover
 Is n’t it laughable, unable to bear the separation, they now shed tears”

இன்றெனது  குறள்:

விரைந்துமுன் பார்த்தகண் எள்ளற் குரிய
கரைந்தின்று நிற்கக்கா ணின்

viraindumun pArttakaN eLLaR kuriya
karaindinRu niRkakkA Nin

[இக்குறளுக்குத் தொடர்பில்லா விட்டாலும், அதிகாரத்திலிருந்து விலகி ஒரு சிறிய பார்வையும் அதன் பதிவும் ]

அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் பல இலக்கியங்களிலிருந்து மேற்கோட்கள் காட்ட முடிந்த காரணம், இவற்றை தமிழ் மக்கள் வாழ்வியலில், தனி மனிதருக்கும், சமூகத்துக்கும் தொடர்புடைய ஒன்றாகப் பார்த்ததனால்; புலவர்களும், கவிஞர் பெருமக்களும், வெளிப்படையாகப் பேசக்கூடிய செய்திகளாவும் கண்டனர். அவர்களுக்கே கூட இன்பத்துப்பால் மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒன்றாக இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக தெளிக்ககூடிய வாழ்வுச் சங்கிலியின் ஓர் இன்றியமையாத அங்கம் என்ற அளவில் மட்டுமே பயன் பட்டிருக்கிறது. செய்திகளை நேரடியாகச் சொல்லாது, மறைத்தே, பாடி வந்திருக்கின்றனர். எங்கே தங்களை வக்கிர எண்ணங்கள் கொண்டவர்களாக சமூகம் நினைத்துவிடுமோ என்கிற பயமாகக் கூட இருக்கலாம். நேரடியாக புணர்வைப் பற்றி எழுதிய வடநாட்டு வாத்ஸ்யாயனர், தென்நாட்டு அதிவீரராமப் பாண்டியர் போன்றோர் தவிர இன்பத்துப்பாலைச் சார்ந்தவற்றை பெரும்பாலான புலவர்கள் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். வள்ளுவரே கூட அதிகார முறைமை வைத்தாரே தவிர, சொல்வதையே மீண்டும் மீண்டும் சொல்வதை தவிர்க்கமுடியாமல், ஓரளவுக்குமேல் உடைத்தும் எழுதமுடியாது, தவித்திருக்கிறார்

 [Though not connected to this verse or chapter, an observation about lack of references for this canto from other literary works, is registered her as a deviation]


For the previous two cantos, there were a plenty of references from other literary works to cite as similar or completely reflecting thoughts; the reason being they connect an individual and the society well and pertain to well being of the society in general. This canto, primarily has to do with a personal relation between a man, and a woman, which the society has treated as extremely private between those are bonded by love. The act of physical intimacy or plainly intercourse as a subject of open talk itself has been a very uncomfortable topic for anyone who has been placed respectably in the society. Execept for Vatsyayana of north and Adiveerarama pAndiyar of south, many poets have barely touched the subject; even if they did, only using obscure and clever euphemisms to give a glimpse of intended thought. Even vaLLuvar, though has written several chapters, has struggled to openly say anything and ended up repeating mundane external manifestations again and again.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...