2nd Jul, 2015
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
(குறள் 1163:
படர்மெலிந்திரங்கல் அதிகாரம்)
காமமும் - காமமாகிய காதல் நோயும்
நாணும் - அது தருவதாகிய நாணமும்
உயிர் காவா - என்னுடைய உயிரினை காவாது
தூங்கும் - உறங்குதே (விழிப்புடன் இருந்து
என் நோனா உடம்பின் - இவற்றை ஆற்றாத என்னுடைய உடலில்
அகத்து - கண் தங்கி
“காவா” என்ற
சொல்லைக் காவடியென்று பொருள் செய்து ஒருவர் பொருள் செய்ய அதையடியொற்றியே மற்ற உரையாசிரியர்களும்
பொருள் செய்திருப்பது, ஆட்டுமந்தைத்தனமாகவே காண்கிறது. காவடியென்பது இறைவனுக்கும் நேர்ந்துகொண்டு
செய்யப்படும் ஒரு காணிக்கையே! அதை ஒரு மனித விரக இயலாமையோடு இணைத்துப் பேசுவது நாத்திகச்
சிந்தனையாளர்களுக்கு வசதியாக இருக்கலாம்.
என்னில் இருக்கும் காமமும், என்னுடைய நாணமும் இவற்றை பொறுக்காத
என்னுடைய உடலில் அளவுடன் விழிப்புடன் இருந்து என்னுடைய உயிரைக் காவாமல் உறங்குகின்றனவே
என்று மீண்டும் அலமந்து தலைவி கூறுகிறாள். காவடியின் இருப்பக்க சுமைபோல இவற்றை உருவகித்து
இருப்பது சுமையாக உடலை அழுத்துவதைக் குறித்தாலும் பொருந்தாப் பொருளே!.
மற்ற உரைக்களுக்கு ஆதரவாக, குறள் எண் தனிப்படர் மிகுதி
அதிகாரத்தில் வரும் கீழ்காணும் குறளைக் கொள்ளலாமென்றாலும் அக்குறளில் “காப்போல்” என்ற
சொல் “காவடி போல்” என்ற பொருளில் ஆண்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கி.வா.ஜ-வின் ஆராய்ச்சி உரைதொகுப்பில் காட்டப்படும் கலித்தொகைப்
பாடலும் இவ்வாறே கூறுவதாகக் கொள்ளவேண்டும். அப்பாடலானது. இப்பாடலில் இது இன்னுமே தெளிவாகிறது.
“மெலியப்
பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதரும் காமமும் கௌவையும் என்றிவ்
வலிதின்
உயிர்காவாத் தூங்கி ஆங்கென்னை
நலியும்
விழுமம் இரண்டு”
Transliteration:
kAmamum
nANum uyirkAvAt tUngumen
nOnA
uDambin agattu
kAmamum –
the lust that is love sickness
nANum –
which gives shyness and sense of shame
uyir
kAvAt – don’t protect
my life force
tUngum –
they are in slumber
en
nOnA uDambin – the body which is not able to bear the lust nor
the shyness/shame
agattu –
firmly set in
The word “kAvA” has been interpreted as stave
carrying burdens on either end, by an earlier commentator like ParimElazhagar.
Other commentators have probably followed the same with herd-mentality. The
stave with burdens is carried mostly as a tribute to the God head; to interpret
it this way, might probably satisfy the atheistic palate, but does not really
give the intended meaning.
The lust and the shame, not being in control, alert
and saving my soul in the body that cannot bear the excess of them, have let me done and are in slumber, pines the
maiden in love. Perhaps to consider the as burden on either side would make
sense in someway; even then the balanced burden on either side indeed would not
feel so.
kI.vA.jAs’ research commentary compilation cites
examples from kalittogai and kuRuntogai; but they also don’t seem to imply the
stave with burden.
“
Without saving my my soul from embaraasement,
my lust
and shame sleep, in my body, and torment”
இன்றெனது
குறள்:
காவா துறங்குதே
காமமும் நாணமும்
சாவாதென்
ஊனில் கலந்து
kAvA duRangudE kAmamum nANamum
sAvAden Unil kalandu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam