3rd Jul, 2015
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
(குறள் 1164:
படர்மெலிந்திரங்கல் அதிகாரம்)
காமக் கடல் - கடலளவு காமம்தான்
மன்னும் உண்டே - பெரும்பாலும் இருக்கிறது (பொதுவாக யாவரிடமும்)
அது நீந்தும் - அக்கடலைத் தக்கத் துணையோடு நீந்தி கடந்திடவோ
ஏமப் புணை - பாதுகாப்பான தோணியொன்றும்
மன்னும் இல் - பெரும்பாலும் இல்லை!
மீண்டும் காதற் தலைவியின்
அங்கலாய்ப்பாக ஒரு குறள். இவ்வதிகாரத்தின் கண் மட்டுமல்லாது இப்பாலின் எவ்வதிகாரத்திலும்
பொருந்துகிற குறள். காமம் என்பதுதான் பெரும்பாலும் கடலளவில், (ஆழி) எங்கும் பெரிதாக
இருக்கிறது. ஆகனால் அதைக் கடக்கக்கூடிய படகுதான் பெரும்பாலும் இல்லை.
மன்னும் என்று இருமுறையும்
பெரும்பான்மையும் என்ற பொருளிலேயே வருகிறது. இது காதற் தலையின் கவனிப்பாக, அவதானிப்பாகத்
தெரிகிறது. பிரிவாற்றாது, மெலிந்திரங்குகையில் இவ்வாறு நொந்துகொள்வதும் இயற்கையே. காமத்தைக்
கடலென்றதால், அது ஆழமும், அகலமும் உடையதை உணர்த்தி, அதன் வலிமையைக் கூறிவிடுகிறார்.
அதைக் கடப்பதை ஒரு சாகசச் செயலாகவும், கடப்பதற்கு அரியதாகவும் கூறி, கடக்கும் பாதுகாப்பான
தோணியனையன் காதலன் என்பதையும் உணர்த்துகிறார்.
Transliteration:
kAmak kaDalmannum uNDE adunIndum
Emap puNaimannum il
kAmak kaDal – lust (desire to be with her man) to the extent of
ocean
mannum uNDE – is what most probably there everywhere
adu nIndum – to swim and cross that deep and vast ocean
Emap puNai – safe vessel or boat
mannum il – most probably not there anywhere
Once again, a pineful complaint of a maiden in
misery; this verse will fit any of the chapters in this canto on lust/desire.
The lustful desire is what is mostly found everywhere, like the expanse of an
ocean; but the boat to cross that ocean is mostly not anywhere.
The word “mannum” is added twice in this verse, in
the sense of “most probably” implying a likelihood of not being so, a little
too. That too, this seems mostly an
observation, a common occurrence, in frustration from the maiden in misery of
being separated from her lover. The metaphorical comparison of lust to the
ocean implies the deep and vast nature of it, and hence its innate strength to
draw anyone in. He also suggests the
safetly boat in the lover, with whom only, it is possible to cross this
challenging ocean.
“The ocean of lust is mostly there everywhere
The
boat to cross to saftey is mostly nowhere!”
இன்றெனது
குறள்:
காமாழி உண்டெங்கும்
காணோம் கடக்கவோ
ஏமாப்பாய்
எங்கும் படகு
kAmAzhi uNDengum kANOm kaDakkavO
EmAppAi engum paDagu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam