ஜூலை 01, 2015

குறளின் குரல் - 1168

1st July, 2015

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
                    (குறள் 1162: படர்மெலிந்திரங்கல் அதிகாரம்)

கரத்தலும் - மறைக்கவும், ஒளிக்கவும்
ஆற்றேன் - என்னால் முடியவில்லை
இந்நோயை - இந்த காம நோயை!
நோய் செய்தார்க்கு - இந்த நோயை எனக்குத் தந்தவர்க்கு
உரைத்தலும் - இதைச் சொல்லலாம் என்றாலோ
நாணுத் தரும் - அதுவும் எனக்கு வெட்கத்தைத் தருகிறது.

என் காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை. எனக்குப் பசலைப் படர்ந்து அது வெளிச்சம் போட்டு எல்லோரும் அறிய காட்டிக் கொடுத்துவிடுகிறது. எனக்கு இந்த நோயை அளித்த என்காதலர்க்குச் சொல்லலாம் என்றாலோ, இந்த பாழாய்ப்போன வெட்கமானது என்னைத் தடுக்கிறதே! என் செய்வேன்? என்று தன் தோழியிடம் தாம் பசலைப் படர்ந்து மெலிந்ததைக் கூறி நலிகிறாளாம் காதற் தலைவி.

Transliteration:

Karattalum ARREnin nOyainnOi seidArkku
uRaittalum nANut tarum

Karattalum - to hide
ARREn - I am not able to!
in nOyain – this love sickness (by my going pale and growing weak)
nOi seidArkku – for my lover who gave this
uRaittalum – to say it also
nANut tarum – I feel so shy and am not able to say it.

I am not able to hide this love sickness. Look at me! I have become pale and become very weak physically; everyone is able to see that so clearly. If I want to let my lover know about this, so that he reconsiders joining me soon, my innate shyness prevents me! What shall I do? – the maiden laments to her friend.

“Neither I am able to hide my love sickness;
 nor am able to tell my lover, out of shyness!”


இன்றெனது  குறள்:

ஒளிக்கவு மாற்றேனிக் காமநோய்  தந்தார்
தெளிந்திடச் சொல்லவும்வெட் கம்

oLikkavu mARREnik kAmanOi tandAr
teLindiDach chollavumveT kam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...