12th Jun, 2015
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
(குறள் 1143:
அலர் அறிவுறுத்தல் அதிகாரம்)
உறாஅதோ - வாராதோ?
ஊரறிந்த - இவ்வூரே அறியுமாறு
கெளவை - பழிச் சொல் எங்களுடைய களவொழுக்கம் பற்றி
அதனைப் - அவளோடு முயங்கி இருத்தலைப்
பெறாஅது - பெறாவிட்டாலும் (அவ்வுறவை)
பெற்றன்ன - அச்சேர்க்கையைப் பெற்றதற்கு (மற்றவர்கள்
பேசும் கௌவையினால்)
நீர்த்து - தன்மையதாம்
பரிமேலழகர் உரை குறளையொப்ப கடினமான ஒன்று. மற்றவர்கள் உரையோ
அவர்களே அனுமானித்த ஒன்றாகவோ அல்லது மற்றவர் உரையை தங்கள் சொற்களில் சொன்னதாகவோ இருக்கிறது;
சொற்கள் வழி சென்று செய்ததாகத் தெரியவில்லை.
சென்ற குறளின் கருத்தை
ஒட்டியே இதுவுமாம். பொதுவாக பழிக்கு அஞ்சுபவர்களைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருப்போம்;
ஆனால் இக்குறளில், தனக்கும் தன் காதலிக்குமான உறவைப் பற்றி இவ்வூரே அறிந்த பழியானது
வாராதோ என்று காதற் தலைமகன் ஆசைப்படுகிறான்.
ஏனெனில் அவ்வுறவினை இன்னும் பெறாவிட்டாலும், அவர்கள் பேசும் குறளையே, அதைப்
பெற்றார்போல் இன்பத்தைத் தருகிற தன்மையதாம் அவனுக்கு.
ஊர்வம்பிலும் உவகைத் தருகிறதைப் பார்க்கிறதாம் காதல் வயப்பட்ட
காதலன் மனம். காதலர் மனத்திலிருப்பதை கண்ணாடியைப் போல் காட்டுவதில் தேர்ந்த வள்ளுவருக்கு
ஏனோ தவக்கோல உருவம்.
Translitertion:
uRAadO
UraRinda kauvai adanaip
peRAadu
peRRanna nIrttu
uRAadO –
won’t it be there?
UraRinda –
that which is known to townspeople
kauvai –
the slanderous gossip (about our union)
adanaip –
that union (with my lover)
peRAadu –
if I don’t get that union
peRRanna –
as if I had it
nIrttu –
such is the effect ( the slander by the town)
Parimelazhagars’ commentary for this is rather
difficult to comprehend; Other commentators do not exhibit any deep
understanding either; Either they are, what they construe superficially or
copying of others’ commentary in their own words.
This verse is similar to the previous one in tone,
different in expression. Usually we hear about people that fear and worry about
slander; Here, the man in love desires to have such gossip or slander from
towns’ people, because, even if he has not been in that kind of close physical
union with her, the slander itself gives the pleasure of being with her.
By saying that even in gossip, the man in love sees
glee, Valluvar shows like a mirror as to what is the minds of lovers; It once
again begs the question as to why does a saintly depiction of him make sense?
“Won’t
there be, gossip about our union, that townspeople already know?
if there was, it would at least be glee as if
that union was real and true!”
இன்றெனது
குறள்:
ஊர்மக்கள்
பேசாரோ தூற்றியே தூற்றினால்
சீர்பெற்ற
தன்மைத்தன் றோ?
UrmakkaL
pEsArO tURRiyE tURRinAl
sIrpeRRa
thanmaittan RO?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam