ஜூன் 11, 2015

குறளின் குரல் - 1148

11th Jun, 2015

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
                        (குறள் 1142: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்)

மலர் அன்ன கண்ணாள் - மலர்ந்த பூவினைப் போன்ற அழகுக் கண்ணாளாம் என் காதலியின்
அருமை அறியாது - மாண்பினை அறியாமல்
அலர் எமக்கு - எமக்கிடையே உள்ள உறவைப் பழிதூற்றி பேசி
ஈந்தது இவ்வூர் - அதனால் நன்மையாகிய உதவியே தந்திருக்கிறது இவ்வூர்

பூ மலர்ந்தால் போன்ற அழகிய விழிகளை உடைய என்னுடைய காதலியின் மாண்பினை உணராத இவ்வூரார் எங்களுக்கிடையே உள்ள காதலைத் தூற்றி பழியாக பேசியது. ஆயினும் அதனால் எமக்கு நன்மையே ஈந்தது. எனக்கு ஆவி உய்ந்தது (சென்ற குறளின் கருத்து படி); எங்கள் காதலும் அதனால் உறுதி பெற்று நிலைத்ததன்றோ? என்கிறான் தலைமகன் இக்குறளில்.

Transliteration:

malaranna kaNNAL arumai aRiyAdu
alaremakku Indadiv vUr
malar anna kaNNAL – maiden of eyes like beautiful blossom of a flower
arumai aRiyAdu – not realizing her virtue and value
alar emakku – slander for us
Indad(u) ivvUr – had gifted this town (thus helping us indirectly)

Not realizing the value and virtue of my maiden with such beautiful flower-blossom like eyes, the town has gifted slander to us. Why is it a gift? It has given me my life back (as seen in the previous verse) and has given us a firmness to our love, says the man in love in this verse.

“Not knowing the value of my flower-eyed maiden
 Slander is gifted to us by the people of the town”


இன்றெனது  குறள்:

பூவிழிப் பெண்மாண் பறியா தலர்செய்தென்
ஆவிக் குதவிற்றிவ் வூர்

pUvizhip penman bariyA dalarseidhen
Avik kudaviRRiv vUr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...