ஜூன் 12, 2015

குறளின் குரல் - 1150

13th Jun, 2015

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
                        (குறள் 1144: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்)

கவ்வையால் - பிறர் அலர் தூற்றலால்
கவ்விது - மேலும் மேலும் வளரும்
காமம் - காதல், பற்று (அவள்/அவன்பால்)
அதுவின்றேல் - அவ்வலரானது இல்லையென்றால்
தவ்வென்னும் - குன்றும், அழியும்
தன்மை இழந்து - அதனுடைய (அப்பற்றினுடைய) இயல்பினை இழந்து.

பிறர் தூற்றி வம்பு பேசுதலால் எம்மிடையே உள்ள பற்று, காதலானது மேலும் மேலும் வளரும். அவ்வாறு பிறர் தூற்றிப் பழிபேசவில்லையெனில் அப்பற்றானது பற்றினில் குன்றி, அழிந்துபடும், அப்பற்றின் இயல்பினை இழந்து, என்று காதல் தலைவனும், தலைவியும் தங்கள் காதலைப் பற்றி ஊரானது வம்புபேசி பழிதுற்றாததை நினைந்து கவலையுறுவதாக உள்ள குறள். இக்குறள் இரு பாலருக்குமே பொருந்துவதாக உள்ளது கவனிக்கத்தக்கது.

Transliteration:

kavvaiyAl kavvidu kAmam aduvinREl
tavvenum tanmai izhandu

kavvaiyAl – because of others gossip
kavvidu – it will grow further and further
kAmam – our love and attachment between us
aduvinREl – devoid of that
tavvenum – it will diminish and perish
tanmai izhandu – losing its(love) nature

Because of the gossip of towns’ people, the love between us only will grow more and more! Devoid of that, it may only diminish in time and eventually perish also - worry both the man and his maiden. The structure of the verse implies it is applicable to both the man and his maiden.

“Because of the gossip, our love only grows more
 Devoid of that, it may diminish and perish for sure”


இன்றெனது  குறள்:

பழியாலே பற்றியது பற்றது இன்றேல்
அழியும் அதனியல்பொ ழிந்து

paziyAlE paRRiyadu paRRadu inREl
azhiyum iyalbozhindu paRRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...