19th Jun, 2015
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
(குறள் 1150:
அலர் அறிவுறுத்தல் அதிகாரம்)
தாம்வேண்டின் - தாமும் என்னை விரும்பினால்
நல்குவர் - தம்மோடு நான் உடன் போகுதற்கு ஒப்புவார்
காதலர் - என்னுடைய காதலர்
யாம்வேண்டும் - நாங்கள் விரும்புவதாகிய (தலைவனோடு உடன்
போகுதற்கு ஏதுவாகிய)
கெளவை - அலர், இணைத்துப் பேசும் வம்புப் பேச்சினைச்
எடுக்கும் இவ்வூர் - செய்கிறது இவ்வூரானது.
இக்குறளின் அமைப்பு எளிதில் விளங்கக்கூடியதாக இல்லை என்பது,
அனைத்து உரையாசிரியர்களின் உரைகளைப் படிக்கும்போது தெளிவாகிறது. “யாம்வேண்டும் கெளவை எடுக்கும் இவ்வூர்” என்னும்
வரி பொருள் விளங்கக்கூடியதே. காதலர் இருவருமே ஊர் இருவரையும் இணைத்து வம்பு பேசுவதை
விரும்புவர், அவ்வாறு பேசப்படக்கூடிய வம்பும், பழியும் அவ்விருவரையும் இணைக்கும் வல்லமை
வாய்ந்தவை என்பதால். முதல் வரியான “தாம் வேண்டின்
நல்குவர் காதலர்” என்பதில்தான் குழப்பமே பலருக்கும். தாம்வேண்டின் என்றால் எதை
வேண்டின் என்ற கேள்வி எழும். அவரும் தலைவி தம்மோடு உடன்போக வேண்டின் என்று கொள்வோமா
என்றால், அலரை விரும்பியவருக்கு அதில் என்ன தடை இருக்கப்போகிறது என்னும் கேள்வியும்
எழும். “நல்குவர்” என்பது மனம் ஒப்பிய
காதலரிடையே பொருந்தாச் சொல்லாகிறது. காதலையா, அல்லது தம்மோடு செல்லக்கூடிய வாய்ப்பையா
என்ற கேள்வியும் எழுகிறது.
இக்குறளை ஊரார் வழியே நின்று பொருள் கொண்டால், தாங்களாக விரும்பினால்
காதலர்தாம் வேண்டுகிற அலரை தூற்றுவர் இவ்வூர் என்றும் பொருள் கொள்ளலாம். பரிமேலழகர்
வழி நின்று பொருள் கொள்வோமேயானால், காதற்தலைவி இவ்வாறு கூறுவதாகக் கொள்ளலாம். “பெண்களாகியநாங்கள்
விரும்புகிற அலரை இவ்வூர் அளிக்கிறது. இனிமேல் காதலருக்கும் நான் வேண்டியவளாக இருப்பேனாயில்
அவ்வலருக்கு ஒப்பி என்னைத் தம்மோடு உடன் போகச் செய்வார்”.
இவ்வாறு கொண்டு கூட்டிப் பொருள் கொள்வதினால், படிமம் எடுத்ததில்
ஏதேனும் குழப்பங்கள் நிகழ்ந்திருக்கலாமோ என்றும் ஐயுர வேண்டியிருக்கிறது.
Transliteration:
tAmvENDi nalguvar kAdalar yAmvENDum
kauvai eDukkumiv vUr
tAmvENDi – If he also desires my being with him
nalguvar – he would agree for me to go with him
kAdalar – my lover
yAmvENDum-
what we desire
kauvai – the rumor about us seeing each other
eDukkum ivvUr
– spreads, this town
It is very apparent that for many commentators, it has
been rather difficult to intepret this verse. The second part of this verse
about the town spreding the rumor is clear. It is possible that lovers desire
the town to indulge in rumor about their love, to expedite their being
together.
The first line “tAm
vENDin nalguvar kAdalar” is confusing to intepret. What is implied by “tAm vENdin” ? Wouldn’t the man in love
already desire to be with his lover? Why does this imply a condition? If he
desired rumor about his love, it is obvious, that he would want his maiden to
go with him; there wouldn’t be any objection on his part for his lover to be with
him. Also the word “nalguvar” does
not fit an appropriate word between lovers that are already united in their
hearts. What would the man in love gift to his maiden? His love? Or the opportunity to go or elope
with him? Both sound superficial and arrogant on part of the man.
If we read it differently, from the point of view of
town, the town would spread rumor if it desires – again not a befitting
interpretation. From the intepretation of Parimelazagar’s, the verse could be
construed entirely from the maiden in love. She says, “The town spreads the
rumor that we girls desire (to expedite the union with our respective lovers;
Now, if the lover also desires me, he would acknowledge the rumor and agree for
me to go with him”
Finally, however much we try to interpret somewhat
convincingly, it is true that it does not leave a sense of satisfaction of a
good intepretation.
“The townspeople have spread the rumor or
gossip, we desire
Now my lover woud also agree, if he desires to
grow that fire”
இன்றெனது
குறள்:
நாங்கள்
விரும்பும் அலரையூர் செய்தது
ஈங்கிவர்
நேர்வர்வேண் டின்
nAngaL virumbum alaraiyUr seydadu
Ingivar nErvarvEN Din
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam