116: (Inability to endure separation - பிறிவாற்றாமை)
[This chapter is about the state of the the
lady in love when her lover leaves her for various reasons including
professional pursuits, and in how many ways, she expresses her pining some in
general terms, some to friend as a messenger to her. Through the verses in this
chapter VaLLuvar hints that love has no endurability of even a little
separation however it may be justified from the point of view of her man]
20th Jun, 2015
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
(குறள் 1151: பிறிவாற்றாமை அதிகாரம்)
செல்லாமை உண்டேல் - நீ விட்டு பிரிந்து செல்லாமலிருந்தால்
எனக்குரை - என்னிடம் சொல்லு
மற்றுநின் வல் வரவு - நான் வந்துவிட்டேன் என்று அறிவிப்பதை
வாழ்வார்க்கு உரை - நீ வரும்போது யார் உயிருடன் இருக்கிறார்களோ
அவர்களுக்குச் சொல்லு.
இதைத்
காதற் தலைமகளின் தோழி, தலைவனிடன் கூறுவதாக பரிமேலழகர் கூறுகிறார்! அது காதலின் உச்சத்தைச்
சொல்வதாக உள்ளது. ஒருவேளைக் காதற் தலைமகன் தன் கிழத்தியிடன் நேரடியாகச் சொல்லுவானேயாயின்,
பிரிவுக்கொப்பாது அவள் அப்போதே உயிர் நீத்துவிடலாம். அதானாலே, அவனும் தோழியின் வாயிலாகப்
பக்குவமாக எடுத்துரைக்கக் கூறியிருப்பான் போலும். அதற்கவள், “நீ செல்லவில்லை என்றிருப்பாயானால்
என்னிடம் சொல்லு. இல்லையெனில் நீ வரும்போது, வந்தேன் என்று அறிவிப்பதை, அப்போது யார்
உயிரோடு இருக்கிறார்களோ அவர்களிடம் சொல்லு” என்கிறாள்.
பரிமேலழகர்
பல பொருள்களை இதில் உணர்த்துகிறார். தலைவியின் தோழி, காதலன் பிரிந்து செல்வதைத் தலைவி
தாங்காது இறப்பாள் என்று நம்புவதையும், அவள் இறந்துபட்டால் தாமும் உயிர் வாழோம் என்பதையும்
தலைவர்க்கு உணர்த்துகிறாள் இக்குறள் வாயிலாக. தலைவனும் நேரடியாகச் சொல்லத்தயங்கி, தலைவியின்
தோழியை எடுத்துரைக்குமாறுச் சொல்லுவதையும் உணரலாம்.
தலைவியே
இதைக் கூறுவாளாயின், காதலின் வன்மையும், கவிதை நயமும் குறைவுபடும் என்று பரிமேலழகர்
கருதியிருக்கலாம். வள்ளுவரின் குறளில் தோழி என்ற விளியும் இல்லை, உள்ளுரையும் இல்லை
என்பதும் கவனிக்கத்தக்கவை.
Transliteration:
sellAmai uNDEl enakkurai maRRunin
valvaravu vAzhvArkk kurai
sellAmai uNDEl -
if you don’t leave
enakkurai – then let me know
maRRunin valvaravu – If you’re going to announce that you
have come back
vAzhvArkk kurai – whoever lives then, let them know
Parimelazagar
interprets this verse as if said by maidens’ friend to her friends’ man; thus
making the love even more exalted. Perhaps, if the man said about his leaving
her (even temporarily on business or otherwise), the friend felt that the
maiden would not live to listen to that news. So he chose a conduit in his
lovers’ friend to say it employing appropriate words. The friend tells him, “if
you don’t leave, then let me know (I will gladly convey that to your maiden); but
if you leave now, when you announce your coming back, you can announce it to
whoever lives then”
Here
the belief of maiden’s friend that the maiden would not live to even listen to
the news and would die at once when her lover leaves, is hinted. She also hints
that even she would not live to hear the news, losing her friend, the lady in
love.
Perhaps
to make the verse even more poetic in nature and to show the love in stronger
terms, Parimelazhagar has interpreted this way.
It is to be noted that neither Valluvars’ verse has that hint nor
explicit addressing of maidens friend.
“If are not leaving me, then you can let me know
Else, whoever lives, about
your return, to know!”
இன்றெனது குறள்:
செல்வாயென் றால்வரும் போதுவாழ் வார்க்குரை
இல்லையென் றாலெனக்குச் சொல்லு
selvAyen RAlvarum pOduvAz vArkkurai
illaiyen RAlenakkuch chollu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam