ஜூன் 18, 2015

குறளின் குரல் - 1155

18th Jun, 2015

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
                        (குறள் 1149: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்)

அலர் - பழித்தூற்றலுக்கு
நாண ஒல்வதோ - வெட்க இயலுமோ?
அஞ்சல் ஓம்பு என்றார் - பயப்படாமையைக் கடைகொள் (பழிக்கு)
பலர் நாண - என்று பலரும் நாண  (உன்னைப் பிரியேனென்று உறுதியளித்து)
நீத்தக் கடை. - அவர் செல்லும்போது

இந்த குறளுக்கான பல உரைகளில், சாலமன் பாப்பைய்யாவின் உரை கொள்ளத்தக்கதாக இருக்கிறது. இதில் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன், அவளைத் தற்காலிகமாகப் பிரிய நேரிடினும், “ஊரார் பழித் தூற்றலுக்காக வெட்குதல் இயலுமோ? பழிக்குப் பயப்படாதே, பழிகூறும் ஊரார் நாணும் படியாக, நான் உன்னைப் பிரியாமலிருப்பேன்” என்று உறுதி கூறுவதாக இக்குறள் உள்ளது. 

பரிமேலழகர் உரையும் பொருத்தமாக இருக்கிறது ஆனாலும், “பலரும் நாணும்படியாக நம்மைத் துறந்தபின்” என்னும் சொற்றொடர் விளக்கமாக இல்லை. தலைவன் நீங்குதலுக்கு, மற்றவர் ஏன் நாண வேண்டும்? அவருக்கு முந்தையரான மணக்குடவர் உரையொட்டியே இவர் இவ்வாறு எழுதியிருக்கக்கூடுமென்று தெரிகிறது. மணக்குடவர், “பலர்” என்பதை, “தோழியும் செவிலியரும்” என்பார், எவ்வாறு அவ்வாறு தெளிந்தார் என்பதைத் தெளிவுறுத்தாமல்! மற்றவர்கள் உரையும் இவற்றின் மாற்றுச் சொல்லாக்கங்களே தவிர, தனித்தன்மையோ, ஆழ்ந்த சிந்தனையோ காட்டவில்லை! இவற்றையெல்லாம் வைத்துப் படிக்கும்போது, சாலமன் பாப்பையா அவர்கள் குறள்வழியே சென்று விளக்கியுள்ள விதமே சரியென்று படுகிறது

Transliteration:

alarnANa olvadO anjalOmbu enRAr
palarnANa nIttak kaDai

alar – for the gossip about us
nANa olvadO – shoud you feel ashamed?
anjal Ombu enRAr – Don’t fear, he said
palar nANa – for others to be ashamed for indulging in rumor or gossip
nIttak kaDai – when he had to go away from me for a while

Among many commentaries for this verse, commentary by Prof.Salamon Pappayya makes the most sense. The man in love, when leaves his maiden temporarily, consoles her saying, “Don’t fear and why should you feel ashamed of vein gossip by the town? Thus assuring to be back, for others that spoke rumor to be shamed”

Though Parimelazhagar seems to make sense mosty, in one sentence where he says” “for other to be ashamed when he left” – it is not clear as to what he means. Why should others feel ashamed when the lover leaves? Woudn’t they feel rather vindicated that they were right? Pehaps Parimelazhagar had his own confusion and had followed an earlier commentator MaNakkuDavar who also said similarly.  MaNakkuDav also interpreted the word “palar” as friend and the nanny of the maiden, without clarifying how he came to that conclusion.

Other commentators have been very vague and have simply copied along the lines of these two without much indepth thinking.

“When he left me temporarily  he said, 'Don't be afraid; why be ashamed?
 For gossip!' - an assurance to be back, for rumor-mongers to be ashamed!”


இன்றெனது  குறள்:

நீங்கினார் நெஞ்சஞ்சாய் தூற்றற்கு நாணியென்
றீங்குளோர் நாணவு ரைத்து

nInginAr nenjanchAi tURRaRku nANiyen
RInguLOR nANavu raittu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...