ஜூன் 17, 2015

குறளின் குரல் - 1154

17th Jun, 2015

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
                        (குறள் 1148: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்)

நெய்யால் - நெய்யை ஊற்றி
எரி - தீயை
நுதுப்பேம் - தணிப்போம்
என்றற்றால் - என்பது போலாம்
கெளவையால் - ஊரார் பேசும் பழித்தூற்றலால்
காமம் - எம்மிடையேயான ஒருவரையொருவர் அணையும் வேட்கை
நுதுப்பேம் எனல் - தணிந்துவிடும் என்று நினைத்தல்

இக்குறளும் இருபாலருக்கும் பொருந்தும், காதற் தலைவனோ, தலைவியோ இருவருமே இவ்வாறு கூறக்கூடும். அல்லது இது ஒரு பொதுக்கூற்றெனவும் கொள்ளலாம். நெய்யை ஊற்றித் தீயை அணைப்போம் என்று யாரேனும் சொல்வரோ? அது தீயை மேலும் வளர்க்கத்தானே செய்யும்! அதேபோன்று தான் காமமாகிய தீயும்! ஊரார் பேசுகிற, பழிச் சொல்லும் நெய்யைப் போன்றதே! காதலர்களிடையேயான ஒருவரையொருவர் அணையும் வேட்கையை மேலும் வளர்க்குமேயன்றி, அவிக்காது என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.

Transliteration:

neyyAl erinuduppEm enRaRRAl kauvaiyAl
kAmam nudupEm enal

neyyAl – with the ghee
eri – the fire
nuduppEm – we will put off (the fire)
enRaRRAl – saying so is similar to,
kauvaiyAl – with the gossip
kAmam – our desire for each other
nudupEm enal – we will put of, saying so!

This verse is common to both the man in love and his maiden as the sentiment expressed here is common to both.  This verse can be simply a statement of observation also. Can anyone put off fire with pouring more ghee? That would only help the fire to rise tall.  Gossip mongering about the lovers is similar to that; it would not quench or suppress the love and would only help grow more between the lovers

“To say that we would put off fire by pouring more ghee
 is like saying to that love is quenched by rumors’ sea”


இன்றெனது  குறள்:

தீதணிப்போம் நெய்யூற்றி என்பபோல் காமமாம்
தீதணிப்போம் கௌவையாலென் னல்

tItaNippOm neyyURRi enbapOl kAmamAm
tItaNippOm kauvaiyyAlen nal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...