ஜூன் 16, 2015

குறளின் குரல் - 1153

16th Jun, 2015

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
                        (குறள் 1147: அலர் அறிவுறுத்தல் அதிகாரம்)

ஊரவர் - ஊரார் பேசும்
கெளவை எருவாக - அலர் பேச்சு உரமாகும்
அன்னை சொல் நீராக - என் அன்னை ஏசும் பேச்சு நீராக
நீளும் - வளர்கின்றதே
இந்நோய் - என்னை பிடித்த இக்காதல் நோய்

இக்குறள் காதலியின் வாய்மொழியாக வருவதே! ஊரார் பேசுகின்ற அலர் அல்லது பழிப் பேச்சு உரமாக இருக்கிறது. என் அன்னையென்னை ஏசிப் பேசுவது பயிரை வளர்க்கும் நீராக இருக்கிறது. இவை இரண்டாலும் என்னுடைய காதல் நோயானது பயிர் போல செழித்து வளர்கிறதே என்று கூறுகிறாள் காதல் தலைவி.


Transliteration:

Uravar kauvai eruvAga annaisol
nIrAga nILumin nOi

Uravar – of the townspeople
kauvai eruvAga – the gossip they speak becomes a fertilizer
annai sol nIrAga – my mothers’ scolding is water for the plant
nILum innOi- grows this disease (of course pleasurable one) of love.

This verse is from the mouth of maiden in love! The gossip mongering of townspeople serves as fertilizer and my mothers scoldings about my love serves as the water for this disease of love to grow more, says the maiden.

“With the gossip of townspeople being the manure now
And mothers words watering, grows the malady of love”

இன்றெனது  குறள்:

அலரே உரமாக அன்னையேச்சு நீராய்
மலர்ந்தலரும் காமமெனும் நோய்

alarE uramAga annaiyEchu nIrAi
malarndalarum kAmamenum nOi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...