15th Jun, 2015
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
(குறள் 1146:
அலர் அறிவுறுத்தல் அதிகாரம்)
கண்டது மன்னும் -காதலரை/காதலியைக் யான் பார்த்தது என்னவோ
ஒருநாள் - ஒரு நாளைக்கு மட்டும்தான்
அலர் மன்னும் - ஆனால் அது பற்றிய ஊர்வம்போ, அதனுறு பழியோ
திங்களைப் - வான் நிலாவை
பாம்பு கொண்டற்று - கிரகணப் பாம்பு விழுங்கி இருள் உலகு முழுவது
பரவியது போலாகியது.
இக்குறளுக்கான உரையில் மணக்குடவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும்
இதைக் காதலியின் கூற்றாகவே உருவகித்துள்ளனர். குறளின் அமைப்போ, இது இருவருக்கும் பொதுவானதாகவே
காட்டுகிறது. ஆயினும் அலரைப் பற்றி தலைவனே மகிழ்வுற வாய்ப்பதிகம் என்று கொண்டால், இதை
ஒரு மகிழ்வுக்குரிய செய்தியாகச் சொல்வதாகக் கொண்டால், இக்குறளை தலைவன்மேல் ஏற்றிச்
சொல்லலாம். ஆனால் இதை அங்கலாய்ப்பாக கொண்டால், இது தலைவியின் கூற்றாகவே கொள்ளலாம்.
ஆயினும், இது ஊர்வம்பின் உலகளாவிய வீச்சினைப்
பற்றிப் பொதுவாகக் கூறுவதாக எண்ணினால், இது
இருபாலருக்குமே பொருந்தும்.
குறள் கூறுவது இதுதான்: நான் அவரை/அவளைப் பார்த்தது என்னவோ ஒரு நாளைக்குதான்.
ஆனால் கிரகண காலத்து ராகுப் பாம்பு சந்திரனை விழுங்குவதை உலகே அறியும் படி இருள் கவ்வுமே,
அதைப் போல எல்லோருக்கும் தெரிந்து விட்டது. வெளிச்சத்தைப் பற்றிச் சொல்லாமால் அலரை
இருளுக்கு ஒப்பாகக் கூறியதால், இதில் மகிழ்வை விட கவலையே இருவருக்குமே இருக்ககூடுமென்று
தெரிகிறது.
Transliteration:
kaNDadu
mannum orunAL alarmannum
tingaLaip
pAmbukoN DaRRu
kaNDadu
mannum – I saw my lover/maiden
orunAL -
for just a day
alar
mannum – But the gossip or rumor has spread to be known to
by everyone
tingaLaip –
like how the moon is swallowed
pAmbu
koNDaRRu – by the mythical Ragu snake during eclipse to
spread darkness
Almost all commentary interprets this verse from the
perspective of a maiden in love; but the construct of the verse puts it as a
common and general statement possible from either. If we have to construe that
someone has more reasons to be happy about the rumor, this can be interpreted
to be from the persopective of a man, based on previous verses; but if have to
interpret this more as a worrisome complaint, the chances are that it is from
the maiden. If we have to just interpret the verse as a statement of how wide
an impact of a rumor is, then it can be from either too!
Now to the verse: I just saw him/her only once, for
a day; but the spread of rumor as darkness was similar to when the Ragu snake
swallowed the moon during eclipse, for the whole world to know.
Since the darkness is implied, it probably has to be
construed as unhappy tone from whoever complaints here.
“We
just saw each other only for a day; though the gossips
spread like moon gulped by the snake, from
world’s lips”
இன்றெனது
குறள்:
ஒருநாள்தான்
பார்த்தேன் அவளை! பழியோ
ஒருநாகம்
வான்மதிகொண் டற்று
orunALtAn pArttEn avaLai pazhiyO
orunAgam vAnmadikoN DaRRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam