4th Jun, 2015
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
(குறள் 1135:
நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)
தொடலைக் - சங்கிலித் தொடர்போன்ற
மாலையாக
குறுந்தொடி - சிறு வளைகளை அணிந்த வாலையாள்
தந்தாள் - எனக்குத் தந்தாள்
மடலொடு - மடலூர்தலோடு
மாலை - மாலை நேரத்து வந்து
உழக்கும் துயர் - என்னை துயரில் வருத்தத்தாழ்த்தும் காமநோயும்
காதலால் ஆற்றாமையும்,
மடலும் எவ்வாறு உமக்கு நேர்ந்தன என்று கேட்டவருக்கு, தலைமகன் கூறுவிதமாக இக்குறள்.
சிறு வளைகளை அணிந்த இந்த வாலைக் குமரியானவள், மாலை நேரம்தோறும் என்னை வருத்தும் துயரில்
ஆழ்த்தும் காம நோயும், அதன்காரணமாக மடலூர்தலையும்
சங்கிலித்தொடர்போன்ற மாலையாக, எனக்குத் தந்தாள் என்கிறான் தலைமகன். படிக்கும்போது
“குறுந்தொடி, கொடலைத் தந்தாள்” என்று படித்தால் பொருள் விளங்கும்.
இதே கருத்தை கலித்தொகை
வரிகள் கூறுவதையும் பார்க்கலாமே!
“ படரும் பனையீன்ற மாவும்
சுடரிழை நல்கியாள் நல்கியவை” என்பார் அப்பாடலாசிரியர்; இதற்கு உரை ஈந்த நச்சினார்க்கினியர்
இவ்வாறு கூறுவார் - “விளங்குகின்ற
இழையினையுடைய, என்னாலே காமிக்கப்பட்டவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும் வருத்தத்தாலுண்டான
பனையீன்ற மடலாற் செய்த குதிரையும்.”
Transliteration:
toDalaik kuRuntoDi tandAL maDaloDu
mAlai uzhakkum tuyar
toDalaik – Chain of garland
kuRuntoDi – the maiden adorned with small bracelets
tandAL – she gave me the pain of
maDaloDu – the so with palmyra horse,
mAlai – in the evening,
uzhakkum tuyar – the suffocating sorrow that is painful (because
of lust it brings)
This verse is
written as a reply given by the man that suffers being lustful of his
love-maiden, for a question as to why such suffering and “climbing horse of
palm” he had to endure. The maiden adorned with the small bracelets, has left
me in the pain of sorrow, and enduring the “palm-horse ride”, giving me the
disease of lust towards her; that too like a chaing of garland, it continues
every evening is what he implies here.
“The maiden, beautifully adorned with small
bracelets, gave me the pains
of
every evening, the lustful thirst for her, like a chain of garland, in veins”
இன்றெனது
குறள்:
மாலை வருந்துயர்
காமத் தொடுமடல்
மாலையாய்
தந்தாள்வா லை
mAlai varuntuyar kAmat toDumaDal
mAlaiyAi tandALvA lai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam