5th Jun, 2015
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
(குறள் 1136:
நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)
மடலூர்தல் - மடலூர்தலைப் பற்றி
யாமத்தும் உள்ளுவேன் - நள்ளிரவிலும் எண்ணுவேன்
மன்ற - மிகவும்
படல் ஒல்லா -
இமைக் கதவுகள் மூடாது
பேதைக்கு என் கண் - இது பற்றி அறியாத பேதைக்காய் என் கண்களின்
பகலில்தானே மடலூர்தல் என்று நினைந்து, இரவுதான் வந்ததே
என்று அறியாப் பெண் நினைப்பாளேயாயின், அவளுக்காக தலைமகன் இவ்வாறு கூறுகிறானாம். மடலூர்தல்
என்பதைப் பற்றி, காமத்துழன்று தாம் நள்ளிரவிலும் மிகவும் நினைத்து கொண்டிருக்கிறேன்
என்று தலைவி அறியவேண்டி கூறுகிறான் தலைவன்.
தன்மேலுள்ள காதலால், பகலில் மடலேறுதல் மட்டுமன்றி இரவிலும்
தூக்கமுமற்று, மடலூர்தலையே நினைந்தானே என்று, தலைவியை மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறான்
தலைவன்
Transliteration:
maDalUrdal
yAmattum uLLuvEn manRa
paDalollA
pEdaikken kaN
maDalUrdal –
the act of climbing the horse made of palm leaves
yAmattum
uLLuvEn – even during mid night
manRa –
much
paDal
ollA – without closing my lids
pEdaikk(u)
en kaN – of my eyes for the lady, that is ignorant of my
resolve.
My maiden perhaps thinks that now the night has set
in, I would not be thinking of the act of riding the palm-horse. She is
ignorant to understand my resolve; even in the middle of the night, I am only
thinking of that without closing the lids of my eyes, says the man, making the
intensity of his lust known to her.
This way, he tries to let her know not only his mind
but further his sleepless state, desiring her, perhaps, in a way to infuse
sense of guilt in her.
“I
think of climbing of ‘palm-horse’ even duing the thick of the night
not
closing eye-lids; would ignorant maiden know about my plight?”
இன்றெனது
குறள்:
இமைமூடா
தெண்ணுவேன் நள்ளிரவும் காமச்
சுமையால்
மடல்பேதைக் காய்
imaimUDa deNNuvEn naLLiravum kAmach
chumaiyAl maDalpEDaik kAi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam