மே 26, 2015

குறளின் குரல் - 1132

26th May, 2015

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்.
                        (குறள் 1126: காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)

கண்ணுள்ளின் - கண்ணிலே நின்று நிலைபெற்று
போகார் - அதினின்றும் அகலாதவர்
இமைப்பின் - நான் இமைத்து அவரைச் சிறை வைத்தார் போல் செய்யினும்
பருவரார் - அதனாலும் வருந்தி அலமுறாத
நுண்ணியர் - நுட்பமாக என்கண் நிறைந்தவர்
எம் காதலவர் - என்னுடைய காதலர்

இக்குறள் முதற்று பின்வரும் அதிகாரா ஈற்று ஐந்து குறள்களும் தலைவியின் நிலை நின்று கூறப்படுபவை. தம் காதல் தலைவன் நுட்பமாக காதலியின் கண்ணிறைந்திருக்கிறானாம்; அவன் காதலியின் விழிகளிலேயே நிலைபெற்று, அதனின்றும் நீங்காதவனாம். தவிரவும், கண்ணிமைப்பதால், சிறையாகிறான் அல்லவார்? அவ்வாறு கண்களால் கைது செய்யப்பட்டாலும், காதற் சிறைக்காக, அவன் வருந்துவதில்லையாம்.  மீண்டுமொரு நயமான கற்பனை, காதற் தலைவியின் பெருமிதத்தில் கூறுவதாக.

Transliteration:

kaNNuLLin pOgAr imaippin paruvarAr
nuNNiyarem kAda lavar

kaNNuLLin – staying permanently inside my eyes
pOgAr – will not leave
imaippin – even if I blink my eyes and imprison him within my eyes
paruvarAr – he will not be afflicted or feel tormented
nuNNiyar – such finesse and subtlety is
em kAdaavar – my lover

Form this verse onwards till the last verse of this chapter, the next five verses are said from the point of view of maiden in love. She says that her lover is so subtle and he has stayed permanently in her eyes; Also, he would never be remorseful or afflicted, if she blinks as if capturing him for imprisonment, thus giving due importance for her lover; such is his love for her too, says the prideful maiden in this verse. Again an a very fine imagination and eloquent expression of love.
“Not leaves my eyes; nor be pained or afflicted if they blink
 such a man of subtlety is my lover, his love doesn’t shrink”

இன்றெனது குறள்:


செல்லார் விழியிருந்து துன்புறார் கண்ணிமைப்பின்
நல்நுட்பெம் காதல ராம்

sellAr viziyirundu tunbuRAr kaNNimaippin
nalnuTpem kAdala rAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...