27th
May, 2015
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
(குறள் 1127:
காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)
கண்ணுள்ளார் - கண்ணிலேயே உள்ளார்
காதலவர் - என் காதலுக்கு உரியவர்
ஆகக் - ஆதலால்
கண்ணும் எழுதேம்
- கண்ணுக்கு மையெழுதேம்
கரப்பாக்கு அறிந்து - அது கண்ணிலுள்ளவரை மறைக்கும் என்பதறிந்து.
இக்குறளில்,
காதலி தன்காதலன் கண்ணிலேயே உள்ளார் என்றும், ஆதலால் தாம் கண்ணுக்கு மையெழுதுவதும் இல்லை
என்றும் கூறுகிறாள். ஏனெனில், அது கண்ணில் மையுள்ளவும், தம் காதலனை மறைக்குமேயென்று,
அவள் அவ்வாறு செய்வதில்லையாம்.
இந்த கற்பனையை
பின் வந்த மாணிக்கவாசகரும் திருச்சிற்றம்பலக்கோவைப் பாடலில் பாடியுள்ளார். அப்பாடலனாது:
தலைவன் பிரிவை ஆற்றாது புலம்பும் காதலி, அன்பர் பிரிவதைப் பற்றிக் கூறியதால் தம் தோழியைக்
கொடியவள் என்று கூறுகிறாள்.
சிறுவா ளுகிருற்
றுறாமுன்னஞ் சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள்
தோழி எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ
தஞ்சனம் அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ
ரன்பரென்றம்ம கொடியவளே.
Transliteration:
kaNNuLLAr kAda lavarAgak kaNNum
ezuthEm karappAkku aRindu
kaNNuLLAr – He is inside my eyes (who)
kAdalavar -
my lover
Agak – and because of that
kaNNum ezuthEm – I will not decorate my eyes with the
black pigment
karappAkku aRindu – knowing it will hide him for the
duration it is there.
In this verse, the maiden says that her lover resides in her eyes and
because of which she does not even apply black pigment in her eyes as
decoration, as it would hide him for the duration it is there. The same
imagination has been subsequently done by later saint poet, MaNickka vAsagar”
in his “ThiruchiRRambala kOvai”, where the maiden that suffers her
lovers’ parting, calls her friend as cruel one because she told her about her
lover having to leave.
“Never I
apply pigment to my eyes as it would hide
my lover, that fills and lives filling my eyes
wide”
இன்றெனது குறள்:
கண்ணுக்கு மையெழுதேன் காட்டா தொளிக்குமே
கண்ணுளா ரையென்று தேர்ந்து
kaNNukku maiyezhudEn kATTA doLikkumE
kaNNuLA rauyenRu tErnndu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam