மே 25, 2015

குறளின் குரல் - 1131

25th May, 2015

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
                        (குறள் 1125: காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)

உள்ளுவன்மன் - நினைப்பேன்
யான் மறப்பின் - நான் ஒருவேளை மறந்தேனானாயின்
மறப்பறியேன் - ஆனால் நான்தான் மறக்கவில்லையே!
ஒள் அமர் - அறிவாற்றலுடன் போர் செய்யவல்ல
கண்ணாள் - கண்களை உடையவளது
குணம் - பண்பு நலன்களை!

இதுவரை, இக்குறள் உட்பட, சொல்லியவை எல்லாம் காதற்தலைமகன் கூற்றாகக் கூறப்பட்டவை, கூறப்படுபவை! காதல் தலைமகன், “நான் அவளை நீங்கிய காலத்து, அவளைப் பற்றி நினைப்பதில்லை! ஏன் நினக்கவேண்டும்? நான்தான் அறிவாற்றலுடன் காதற்போர் புரியும் கண்களை உடைய என் காதலியின் பண்பு நலன்களாம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவற்றை மறப்பதே இல்லையே!

கவிநயமிக்க கற்பனை, பிற்கால நாடக ஆசிரியர்களுக்கும், காதல் வயப்பட்டவர்களுக்கும் உதவிக்கொண்டே வந்திருக்கிற ஒன்று.  “ஒள்ளமர்” என்ற சொல்லும், காதற் தலைமகள் கண்கள் காதல் போரை அறிவு திட்பத்துடன் புரியவல்லவை என்பதைச் சொல்லுகின்றன. அக்கண்கள் காதலன் கருத்தறிந்து கதைகள் சொல்லும். நவரசங்களைக் கொட்டும் திறன் வாய்ந்தவை என்பதும் உண்மை! அதைத் தலைவனும் அறிந்தே இருக்கிறான் என்பது உண்மை!

Transliteration:

uLLuvan manyAn maRappin maRappaRiyEn
oLLamark kaNNAL guNam.

uLLuvan man – I will definitely remember
yAn maRappin – if I forget
maRappaRiyEn – But I will not forget
oLL amark – battle with intelligence
kaNNAL – maiden of such eyes
guNam – her virtuous traits.

So far in this chapter, all have been said as words of man in love. In this verse he says, “Whenever I am not with her, I don’t think of her! Why should I? I don’t ever forget the good traits of my maiden, whose eyes battle with intellect; then why should I remember?

What vaLLuvar has said in this verse is indeed a beautiful imagination – one that has been used again and again by furture lovers as well as drama writers. The word, “oLLamar” means eyes that battle with intellect. They know the moods of her lover and can show all appropriate emotions to win her love war – a fact that her man also understands.

“I may remember, only if I forget! But I never will,
 those battling intellectual eyes of my love’s spell”

இன்றெனது குறள்:

போர்திறக் கண்ணாள்தம் பண்புகள் நான்நினையேன்
சோர்ந்தால்தா னேநினைப் பேன்?

(சோர்வு - மறத்தல்)

pOrthiRak kaNNALtam paNbugaL nAnninaiyEn

sOrndAltA nEninaip pEn?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...