மே 14, 2015

குறளின் குரல் - 1120

14th May, 2015

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.     
                        (குறள் 1114: நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்)

காணின் - கண்டால் (அவள் கண்ணை)
குவளை - குவளை மலர்
கவிழ்ந்து - வெட்கி தலை கவிழும்
நிலன் நோக்கும் - பூமியைப் பார்க்கும் (மீண்டும் பார்க்கவியலாது)
மாணிழை - அழகிய அணிகளை அணிந்த பெண்ணவளின்
கண்ணொவ்வேம் என்று - கண்ணழகுக்குத் தாம் ஒப்பிலோமென்று.

அழகிய குவளைமலர், அவ்வழகிய அணிகளைப் பூண்ட பெண்ணின் கண்ணழகைக் கண்டு வெட்கும், நிலம் நோக்கும், தாமவளின் கண்ணழகுக்கு ஒப்பாக மாட்டோமென்று, என்று அழகிய தன் காதலியின் கண்ணழகைப் பாராட்டும் தலைவன் பிறரிடம் பெருமிதப்படுவதாக நயமிகு கற்பனை.

Transliteration:

kaNin kuvaLai kavizhndu nilannOkkum
mANizai kaNNovvEm enRu

kaNin – when it see her eyes
kuvaLai – the KuvaLai flower (purple water-lily)
kavizhndu – put down
nilan nOkkum – and look at the floor
mANizai – love decorated with jewels
kaNNovvEm enRu – will not compare to her eyes.

The purple water-lily will put its head down in shame, thinking that its beauty cannot compare to the beautiful eyes of the girl decorated with jewels, if it can see. A verse as if the man in lover prides about his lady-loves’ beautiful eyes!

“If the water-lily can see, in shame it will look down the ground;
 it cannot compare to jewel-decorated girls eyes be spell-bound”

இன்றெனது குறள்:

நிலம்பார்த்து நாணும் குவளைதாம் காணின்
இலமிவள் கண்ணுக்கொப் பென்று


nilampArttu nANum kuvaLaitAm kANin
ilamivaL kaNNukkop penRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...