மே 13, 2015

குறளின் குரல் - 1119

13th May, 2015

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.        
                        (குறள் 1113: நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்)

முறி மேனி - இளந்தளிர் போன்ற பசும்மேனியும்
முத்தம் முறுவல் - முத்து வரிசையென முறுவலிக்கும் பற்களும்
வெறி நாற்றம் - இயற்கையாகவே கூடிய நல்ல வாசமும்
வேலுண்கண் - மையில் குளித்த வேலன்ன கண்களும்
வேய்த் தோள் - மூங்கில்போன்ற தோள்களும்
அவட்கு - அவளுக்கு.

தலைமகளின் ஒட்டுமொத்த அழகை தலைமகன் வியந்து, விதந்து கூறுமாறு அமைந்த குறள்! அவளுக்கு இளம் பசுந் தளிர் போன்ற மேனியாம்; அவளது பல்வரிசையோ முத்துச் சரமாம்; அவளுக்கு இயற்கையாக அமைந்த நல்ல வாசமாம்; அவளுடைய மையால் குளித்த கண்களோ கூர்மையான வேலாம்; தவிரவும் அவளுடைய தோள்களும் மூங்கில் போன்றனவாம்.

பாண்டியனின் ஐயத்தை தலைமகனின் வாயிலாக வள்ளுவர் தீர்த்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது!  இந்த குறளில் ஒட்டு மொத்தமாக பெண்ணினை தலைமகன் வாயிலாக வள்ளுவர் வருணிப்பதே தெரிகிறது.

Transliteration:

muRimEni muttam muRuval veRinARRam
vEluNkaN vEyttOL Lavatku

muRi mEni – a body of a young leaf
muttam muRuval – teeth set like pearl beads
veRi nARRam – natural fragrance in the body
vEluNkaN – dyed, spear like eyes
vEyt tOL – shoulder like bamboo bend
avatku – she has.

In this verse VaLLuvar describes through the words of a man in love, his lovers physical form as a combination of best of similes for each part. Her whole body looks like a fresh, young leaf, so soft; her teeth row is a necklace of pearl beads; she has a natural fragrance in her; Her dye bathed eyes are like piercing spears; her shoulders are like bamboo bends.

It seems like VaLLuvar has answered as a poet to the Pandia Kings’ doubts bcause of which the poet NakkIra had a quarrel with the Godhead! 

“Her frame is a tender shoot; teeth set as pearl row; she has natural good fragrance;
 Her dye-bathed eyes’re piercing spears; shoulders like bamboo – such is her radiance”

இன்றெனது குறள்:

தளிர்மேனி முத்துப்பல் நல்வாசம் கண்மை
குளித்தவேல் மூங்கில்தோ ளாள்

thaLirmEni muththuppal nalvAsam kaNmai

kuLittavEl mUngilthO LAL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...