12th
May, 2015
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
(குறள் 1112:
நலம்புனைந்துரைத்தல் அதிகாரம்)
மலர் காணின் - பூக்களாம், தாமரை, குவளை, போன்ற பூக்களைக்
கண்டால்
மையாத்தி - மயங்குகிறாயே
நெஞ்சே - நெஞ்சமே
இவள் கண் - இவளுடைய கண்
பலர் காணும் - நான் மட்டுமே காண்பதாயினும் பலரும் காணுகின்ற
பூவொக்கும் என்று - பூக்களுக்கு இணையென்று
எந்தவொரு மலரைக்கண்டாலும் நான் மட்டுமே கண்டு மகிழ்ந்த
என் காதல் கிழத்தியின் கண்களை, பல காணும் பூக்களுக்கு ஒப்பாக நினைத்து மயங்குகிறாயே
நெஞ்சே! உள்ளமானாலும் உனது அறியாமையை அன்றோ நீ வெளிக்காட்டுகிறாய் என்று நெஞ்சினை கடிந்துகொள்வதாக
ஒரு கற்பனை.
இந்த குறள் பல உரையாசிரியர்கள் கற்பனையைத் தூண்டியிருக்கிறது. பரிதியார் இவ்வாறு கூறுவார்: “நெஞ்சே நீ கண்டு மயங்கும்
மலர்கள் என் காதலியின் கண்களைக் கண்டு நாணும்; ஏனெனில், அவளைப் போல் கண்களைப் பெற்று,
அவள் பார்க்கும் காதல் பார்வையை அவை பார்க்க முடியாதே!”.
கண்களைப் பூக்களுக்கு ஒப்பாகக் கூறினாலும், அப்பூக்களுக்கு,
இவள் கண்களின் ஈர்க்கும் தன்மை இல்லையே! எதற்காக மயங்குகிறாய் என்று நெஞ்சைக் கடிந்து
கொள்வதாக அமைந்த குறள்.
Transliteration:
malarkANin
maiyAtti nenjE ivaLkaN
palarkANum
pUvokkum enRu
malar
kANin – When you see flowers like lotus, lily
maiyAtti –
confused you are!
nenjE –
O! mind
ivaL kaN
– My beautiful maidens’
palar
kANum – like many others seeing
pUvokkum
enRu – comparable to the flowers (seen by others)
How confused you are to compare the eyes of my
lover-maiden, whose eyes, I alone am privy to, as if they are like the flowers
seen by others, when ever you see a flower like lotus or lily! – a verse
as if the man in love admonishing the mind – a nice imagination on the part of
VaLLuvar.
This is one of the verses that has kindled the
imagination of many commentators. ParidiyAr, interprets it differently
as follows: “O mind! the flowers that you see and get confused would feel shy
seeing my maidens’ eyes, because they might have the beauty but could not
convey the desire expressed by her eyes!”
“You’re
so confused looking at flowers seen by others, O Mind!
to my lover-mainden’s eyes, when another
blossom you find”
இன்றெனது குறள்:
பல்லோர்காண் பூக்கிணைக்கண் ணென்று மயக்கமோ
நல்லபூக் காணின்நெஞ் சே!
pallOrkAN pUkkinAikkaN NenRu mayakkamO
nallapUk kANinnen jE!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam