மே 04, 2015

குறளின் குரல் - 1111

5th May, 2015

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
                        (குறள் 1105: புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம்)

வேட்ட பொழுதின் - வேண்டிய நேரத்தெல்லாம்
அவையவை போலுமே - விரும்பியவை கிடைத்தல் போன்றதே
தோள் தாழ் (தோட்டார்) - கலந்தகாலத்து தோள்வரைத் தளர்ந்து தழைந்த
கதுப்பினாள் - கூந்தலுடையாள்
தோள் - ஆண்மகன் சாய்ந்து முயங்கியிருக்கும் தோள் (அணத்தலை குறிப்பது)

மீண்டும் காதலியின் அரவணைக்கும் தோள்பற்றி ஒரு குறள்; காதலன் கலந்த காலத்து காதலியின் கூந்தலானது தளர்ந்து, தழைந்து தோள்வரை பரந்து கிடக்குபடியாகக் காதலியின் தோளில் முயங்கியிருத்தலை, விரும்பிய போதெல்லாம், விரும்பியவை கிடைத்தலாம் இன்பத்துக்கிணையாக நினைப்பதைக் கூறும் குறள்.

மணக்குடவர் பாடத்தில் தோட்டார் என்பதை தோள் தாழ் என்று பிரித்து பொருள் கூறுவார். தோட்டார் என்ற சொல்லாடல் கலித்தொகை, சிலப்பதிகாரம் இவற்றிலும் வருகிறது.

“தோட்டார் குழலியொடு” என்று சிலம்பிலும், “தோட்டார் கதுப்பின் என்தோழி” என்று கலித்தொகையிலும் வரும் எடுத்துக்காட்டுகள் தோட்டார் என்ற சொல்லை தோள் வரைத் தாழ்ந்த கூந்தலாகவே காட்டுகின்றன. தோட்டார் என்ற சொல் அகராதிகளில் காணப்படாத சொல்.

“வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்தோள்
 பூட்டார் சிலைநுதலாட் புல்லாத் தொழியேனே 

 என்ற சீவக சிந்தாமணி வரிகள் கூறுவது இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

Transliteration:

vETTa pozhudin avaiyavai pOlumE
tOTTAr kaduppinAL tOL

vETTa pozhudin – Whenever desired
avaiyavai – whatever
pOlumE – like that (referring to getting the desired ones)
tOL tAzh (tOTTAr) – falling up to the shoulders loosely during intimate relationship
kaduppinAL – having such hair ( to sway over the )
tOL – shoulder

Another verse about the embracing shoulders of a lover. When the lover is in intimate relationship with his lover, her hair is loose and falls on her shoulders. Such pleasure is comparable to the pleasure of someone geeting everything he desires.

MaNakkuDava splitls the word “tOTTAr” as “tOL+ tAzh” which means fallind upto shoulders. The word tOTTar is used in works of kalittogai and silappadikAram also, with the same meaning.

“It is comparable to the pleasure of getting all and whenever desired,
 when in the sweethearts’ embrace, hair falling on shoulders untied”


இன்றெனது குறள்:

வேண்டுறும் வேட்டபோல் கூந்தல் தழைதோளாள்
தீண்டுறும் இன்பமே தான்

vENDuRum vETTapOl kUndal tazhaitOLAL
tIndRum inbamE tAn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...