மே 06, 2015

குறளின் குரள் - 1112

6th May, 2015

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
                        (குறள் 1106: புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம்)

உறுதோறு - அவளை அணந்து இருக்கும்போதெல்லாம்
உயிர் தளிர்ப்பத் - என்னுடைய (சோர்ந்த) ஆவிக்குப் புத்துயிர் கிடைப்பதுபோல்
தீண்டலால் - அவள் என்னைத் தீண்டலால்
பேதைக்கு - அப்பெண்ணுக்கு
அமிழ்தின் - உயிர்காக்கும் அமிழ்தால்
இயன்றன தோள் - செய்யப்பட்டனவோ தோள்கள்

நான் அவளை அணைக்கும்போதெல்லாம் என்னுயிர் துளிர்க்கும் படியாக இருக்கிறது அவள் என்னைத் தீண்டுவது. ஆதலின் என்னை அணைக்கும் அவளின் தோள்கள் அமிழ்தத்தால் ஆனவையோ? என்று காதலன் வியப்பதாக உள்ள குறள். பெண்ணின் அணைப்பே உயிர்துடிப்பெனவும், அவள் தோள்களே அமிர்தம் எனவும் கூறியது நயமான கற்பனை.

Transliteration:

uRutOru uyirtaLirppat tInDalAl pEdaikku
amizdin iyanRana tOL

uRutOru – Whenever in her embrace
uyirtaLirppat – life springs back again
tInDalAl – such is her touch
pEdaikku – for that girl
amizdin – of nectar
iyanRana tOL – made her shoulder (because of the life reviving ability)

Whenever in her embrace, life springs back anew. Such is her touch. So, her shoulder that has the life-reviving capability is made of nectar, perhaps, wonders the man in love, in this verse. It is indeed a nice imagination to see the embrace of the girl one loves as the life-saving force and the instrument of such embrace, her shoulders are made of nectar.

“Everytime in her closeness, springs life back as such
 Hence her shoulder is made of nectar; such is her touch!”


இன்றெனது குறள்:

மீண்டும் துளிர்க்கும் உயிரப்பெண் மெய்த்தீண்ட
ஈண்டவள் தோளே அமுது

mINDum thuLirkku uyirappeN meyththINDa
INDavaL tOLE amudu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...