மே 04, 2015

குறளின் குரல் - 1110

4th May, 2015

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
                        (குறள் 1104: புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம்)

நீங்கின் தெறூஉம் - நீங்கினால் சுடுகிறது
குறுகுங்கால் - அவள் நெருங்குகையில்
தண்ணென்னும் - குளிர்கின்ற
தீ யாண்டுப் பெற்றாள் - (விசித்திரமான) காதல் தீயினை எங்கிருந்து பெற்றிருக்கிறாள்
இவள் - இந்த பெண் (என்று காதலியின் அணுக்கம், அதின்மை பற்றி வியக்கும் காதலன்)

இப்பெண்ணால் அளிக்கப்பெறும் காதலானது விநோதமான தீயாய் இருக்கிறதே. ஏனெனில் இத்தீ வளர்ந்து எரிகிறது அவளுள். அவள் என்னை விட்டு விலகினால் சுடுகிறது. அவள் என்னோடு நெருங்கி முயங்கும்போது,  அது குளிர்கிறது. தீயின் இயல்புக்கு மாறான தீயாய் இருக்கிறதே என்று வியக்கிறானாம் காதலன்.

மீண்டும் பல இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் இருப்பினும், பழம்பாடல் ஒன்று அழகாக இதைக் கூறும்.

“நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
 சாரச் சார்ந்து தீரத் தீரும்
சாரனாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல்லாதே”

மற்றொரு நாலடியார் பாடல் வரி, “நீருட் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி ஒளிப்பினும் காமம் சுடும்” என்கிறது.

Transliteration:

nIngin terUum kuRugunkAl taNNennum
tIyANdup peRRAL ivaL

nIngin terUum – If she leaves me, it burns
kuRugunkAl – When she is close to me
taNNennum- to feel cool
tI yANdup peRRAL – such a peculiar fire where did get from?
ivaL – she, my beloved?

The fire of love that she brings is so peculiar, unlike the nature of real fire. When she leaves me or withdraws from, it burns, quite contrary to the real fire; when she draws close to me, it feel cool, again quite contrary to the real fire. Where does it she get such a fire, wonders the man in love.
This imagination has been again used by  many poets in many literary works, nAlaDiyAr, kuRunthogai etc.

“Where does she get this fire of love from that It burns
 when she withdraws and feels cool when drawas close”


இன்றெனது குறள்:

நீங்கினால் தீய்க்கும் நெருங்கத் தணிக்கும்தீ
ஈங்கெங்கு பெற்றாளிப் பெண்?

nInginAl tIykkum nerungat taNikkumtI
Ingengu peRRALi peN?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...