மே 03, 2015

குறளின் குரல் - 1109

3rd May, 2015

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
                        (குறள் 1103: புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம்)

தாம்வீழ்வார் - தாம் யாரை விரும்புகிறாரோ
மென்றோள் - அந்த மங்கையின் மெல்லிய தோள்கள்மீது
துயிலின் - துயில்வதிலும்
இனிதுகொல் - இனிமையோ
தாமரைக் கண்ணான் - பங்கயக் கண்ணனாம் மால்
உலகு - இருக்கும் உலகு? (சுவர்கம் என்னும் உரையும் உண்டு)

தமக்கு விருப்பமான மங்கையில் மென்மையான தோள்களில் சாய்ந்து உறங்குவதைக்காட்டிலும்,
பங்கயக் கண்ணனான மாலின் உலகு அவ்வளவு இனிதானதா என்ன? என்று காதலியோடு முயங்குதலை எண்ணி இன்புறுகிற நிலையைக் கூறுகிறார் வள்ளுவர்.

காதலியின் தோளில் சாய்ந்து துயிலுதலாகிய சுகத்தின் வேட்கை காதல் தலைமகற்கு காலம் காலமாக இருந்துவருவது போலும். குறிஞ்சிப் பாடல், வேய்புரை மென்தோள் இன்துயில்” என்கிறது. “அரிவை தோளிணைத் துஞ்சி” என்று குறுந்தொகை கூறுகிறது. “வேயுறழ் மென்றோள் துயில்பெறும்” என்று கலித்தொகையும் பாடுகிறது.

இக்குறளின் முற்றுக்கருத்துக்கொப்பாக, பரூஉ மோவாய்ப் பதுமனார் என்னும் புலவர் எழுதிய
குறுந்தொகைப் பாடலொன்று:

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.

விரிந்த அலையையுடைய பெரிய கடல், வளைந்த பூவுலக இன்பமும், பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும், ஆகிய இரண்டும், தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன்னைப் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும் உடைய, தலைவியினது, தோளோடு தோள் மாறுபடத்தழுவும், நாளிற்பெறும் இன்பத்தோடு, ஒருங்குவைத்து ஆராய்ந்தாலும், எமக்கு அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா என்று தலைவன் பாடுவதாக அமைந்த பாடலிது.

Transliteration:

tAmvIzhvAr menROL tuyilin inidukol
tAmaraik kaNNAn ulagu

tAmvIzhvAr – that who he likes
menROL – leaning on the soft shoulders of that maiden
tuyilin – sleeping
inidukol – is it sweeter?
tAmaraik kaNNAn – the lotus eyed Godhead
ulagu – his world?

What could be sweeter than sleeping leaning on the soft shoulders of his beloved for someone, asks vaLLuvar, describing how a lover desires to be in union with his beloved girl. Is the abode of  lotus-eyed Godhead (Vishnu according to some commentators) better that pleasure, wonders the man in love!

For ages this desire to sleep on the soft shoulder of the beloved has been expressed by different poets as a pleasure superior to heavens by using other metaphors too. A Kurunthogai poem goes to great length detailing this pleasure as seen in the tamil narrative above. A rough translation of the same would be: A lover thinks that all the pleasures of the world surrounded by, vast seas of incessant waves, and the pleasures of heavenly abode can not compare to the pleasures of closeness with the lotus-eyed with golden hue, decorated hips.

“Is the world of lotus-eyed Godhead better than the delight
 of sleep on the shoulders of the beloved tender and adroit”


இன்றெனது குறள்:

பங்கயக் கண்மால் உலகுமினி தோவிரும்பும்
மங்கைமென் தோள்துயிலி னும்

pangayak kaNmAl ulagumini thOvirumbum
mangaimen thOLtuyili num

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...