18th
April, 2015
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
(குறள் 1088:
தகையணங்குறுத்தல் அதிகாரம்)
ஒள் நுதற்கோ - (அப்பெண்ணின்) ஒளி பொருந்திய நெற்றிக்கோ
உடைந்ததே - வீழ்ந்தது,
அழிந்தது
ஞாட்பின் உள் - போர்களத்தில் உள்ளே
நண்ணாரும் - பகைவரும் (தம்மை வந்து போரில் சந்திக்காத
என்பதே பொருந்தும் இங்கு)
உட்கும் - அஞ்சுகிற, அல்லது கண்டு வெட்குகிற அளவுக்குள்ள
என் பீடு - என்னுடைய வலிமையும் அதன் காரணமாய் வந்த
பெருமையும்.
போர்களத்தில் என்னோடு
பொருத வீரர் அல்லாது, மற்ற பகைவரும் அஞ்சுகிற, அல்லது கேட்டே வெட்குற அளவுக்கு வலிமையும்,
வீரமும், அதன்கண் வந்த பெருமையும், அப்பெண்ணாளின் ஒளி பொருந்திய நெற்றியழகிற்கு முன்னர்
வீழ்ந்ததே என்று ஆண்மகன் மருகுவதாக் அமைந்த குறள் இது,
தற்காலக் கவிஞர்
ஒருவரும் பாடியுள்ளார் “கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி” என்று பெண்ணின் எழிலில் இழந்து,
தம்முடைய கர்வம்
அழிந்த ஓர் ஆண்மகனைப் பற்றிப் பாடியுள்ளார்.
குறுந்தொகைப் பாடல் வரியொன்று, நுதலால் மதி மயக்குறுதலை, “ பிறையென,
மதிமயக் குறூஉம் நுதலும்” என்கிறது. கலித்தொகை
வரிகள் குறளின் முற்றுப் பொருளையும் ஒத்த ஒன்றைக் கூறுகின்றன. “போருள், அடல்மாமேல்
ஆற்றுவேன் என்னை மடல்மாமேல் மன்றம் படர்வித்தவள்” என்பதே அவ்வரிகள்.
கம்பஇராமாயணத்தில், மாயாசனகப் படலத்தில், வரும் பாடலும் முற்றுக்கருத்தையும்
ஒத்ததே.
ஈசனே முதலா
மற்றை மானிடர் இறுதி ஆகக்
கூச, மூன்று
உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு
ஆவி தோற்றிலென்; பெண்பால்வைத்த
ஆசை நோய் கொன்றது
என்றால், ஆண்மைதான் மாசுணாதோ?
இப்பாடலின் பொருள்: சிவபிரானை முதலாகக் கொண்டு
மற்றுமானிடர் வரை உள்ள
அனைவரும் அஞ்சும்படி; மூன்று உலகத்தையும்
காக்கும்படி வெற்றி படைத்த வீரர்
வரிசையில் பேசப்படுபவர்
எவருக்கும் உயிர் தோற்றிலென்.அத்துணை வீர
வலியுடைய என்னைப் பெண்ணிடம்
வைத்த காம நோய் கொன்று
விட்டது என்றால்; (உலகில்) வீர
ஆண்மை குற்றப்படும் அல்லவா?
Transliteration:
oNNudaR kOo uDaindadE
njATpinuL
nANNArum uTkumen pIDu
oL NudaRkO – is it for that bright forehead (of that girl)
uDaindadE – fell, ruined (what? Comes in the last word)
njATpin uL – in the battlefield
nANNArum – even the foes (perhaps meaning that did not
see him fighting)
uTkum – fearful or feeling shy seeing his valor
en pIDu – my glory as a winning warrior
Apart
from the valiant foes that fought with me, even the ones that only heard about
my valor and were fearful of me, knew of my glory; all that has come to be
ruined by that bright forehead of the beautiful girl, laments the male in this
verse.
Even
a present day poet wrote a song, which says, “In the curves of her braided hair
and plenty of other beautiful curves of her body, my pride is ruined”
“The pride of my valor and glory
that even the foes that have only heard
from other who have fought
me, ruined, seeing that girls bright forehead”
இன்றெனது குறள்:
காணாரும் கேட்டஞ்சும் போர்களத்
தென்னாற்றல்
வீணாமொண் நெற்றியினாள் முன்
kANARum kETTanjum pOrkaLat
tennARRal
vINAmoN neRRiyinAL mun
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam