19th
April,2015
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
(குறள் 1089:
தகையணங்குறுத்தல் அதிகாரம்)
பிணையேர் - பெண் மானின் (புறத்திலே)
மடநோக்கும் - வெருள் நோக்கு (அச்சப் படுகின்ற நோக்கு)
நாணும் - வெட்குதலாகிய இயல்புமே அணிகலமாக (அகத்திலே)
உடையாட்கு - உடைய பெண்ணவளுக்கு
அணி எவனோ? - அணிகலன்களால் என்ன பயனாம்?
ஏதில தந்து - மற்ற அணிகலன்களைக் கொடுப்பதால்
புறத்தே பெண்மானினைப் போல் மருட்சியுடன் கூடிய அச்சப் பார்வையும்,
அகத்திலே பெண்களுக்கே உரிய இயல்பாம் நாணமும் அணிகலனாகக் கொண்ட பெண்ணுக்கு, வேறு அணிகலன்களைக்
கொடுத்து அணிவிப்பதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது? என்று பெண்ணுக்கு அணிகலன்கள் அணிவிப்பதால்
ஏற்பது சுமையை நொந்து ஆண்மகன் கூறுவதாக அமைந்த குறளிது.
காதல் வயப்பட்டால் ஆண்மக்களுக்கு எந்தவிதமான கவலைகளெல்லாம்
வருகின்றன என்பதற்கு இக்குறள் ஒரு எடுத்துக்காட்டு!
Transliteration:
piNaiyEr
maDanOkkum nANum uDaiyATku
aNiyevanO
Edila tanDu
piNaiyEr –
like a doe (female deer), outwardly
maDanOkkum –
fearful look
nANum –
innate shyness that is in nature for females
uDaiyATku –
for girls that have these above two
aNi yevanO?
– what use is it in more burdening jewels ?
Edila
tanDu – by giving other jewels
What use is it to burden her with more jewels when
she adorns the jewels of outwardly fearful look like a doe (female dear) and
innately shyness, typical of females, by giving her other jewels? - Asks a man
love-struck, worrying about burdening his sweet heart with heavier jewels, in
this verse!
It is indeed a wonder as to what sort of worries
dominate love-struck men!
“Fearful
like doe, bashful innately, with such things adorned
Why would she need other jewels to wear and be
burdened?”
இன்றெனது குறள்:
பெண்மானின் அச்சநோக்கும் நாணமும்
உற்றாளுக்
கொண்ணணிகள் என்பயனு டைத்து?
( பெண்மானின் அச்சநோக்கும் நாணமும்
உற்றாளுக்கு ஒண்ணணிகள் என் பயனுடைத்து?)
peNmAnin acchanOkkum nANamum uRRALuk
koNNaNigal enpayanu Daittu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam