17th
April,2015
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
(குறள் 1087:
தகையணங்குறுத்தல் அதிகாரம்)
கடாஅக் - மதமொழுகு
களிற்றின்மேற் - யானையின் மேல்
கட்படாம் - அதன் கண்ணை மறைக்கும் முகபடாம் போலாம்
மாதர் - இளம் பெண்களின்
படாஅ முலைமேல் - தொய்வில்லாத, சாயாத கொங்கைகளை மறைக்கும்
துகில் - அவளுடைய மேலாடை
மதம்பிடித்த யானையின் கண்களை மறைக்கும் முகபடாமானது அது
கொல்லாமல் பிறரைக் காப்பது போல, இளம் பெண்ணின் திமிர்ந்த கொங்கைகளைக் மூடிய மேலாடையானது
இருக்கிறது. காதல் வயப்பட்ட இளைஞரை அம்மூடிய மேலாடையானது அப்பெண்ணிடமிருந்து காப்பாற்றுவதை
குறிக்கிறது இவ்வுவமை.
வள்ளுவரை தவமுனிவர் வேடத்திலே உருவகித்தவர்களை என்ன சொல்வது.
பெண்ணின் அங்கங்களை வருணிப்பது, ஆதிகாலத்திலிருந்து எல்லா கவிகளுக்குமே வழக்கமாயிருக்கிறது,
பூடகமாக கூட அல்ல, வெளிப்படையாகவே! மேலும் பல சங்கப்பாடல்களும், திருக்குறளும், கோவில்
சிற்பங்களும் நமது உடை வழக்கங்கள் இன்றைய வழக்குக்கு முற்றிலும் மாறாக இருந்ததையே சுட்டுகின்றன.
கி.வா.ஜ-வின் ஆராய்ச்சி உரை பெருங்கதையிலிருந்து ஒரு காதையிலிருந்து
சில வரிகளை முற்று கருத்தையும் ஒத்திருப்பதாகக் காட்டுகிறது.
“அமிழ்துபெய் செப்பின் அன்ன வெம்முலை
நுகர்பூங் காமத்து நுதிமுகம் முரிஞ்சிக்
கடாஅ
யானைக் கண்ணகம் மறைத்த
படாஅத்து
அன்ன படிவத்து ஆகிய
வடகப்
போர்வையை வனப்பொடு திருத்தி”
Transliteration:
kADAak kaLiRRinmER kaTpaDAm mAdar
pADAa mulaimEl tugil
kADAak – frenzied, mad
kaLiRRinmER – on elephants face
kaTpaDAm – the veil that covers the angry eyes
(perhaps to save people)
mAdar - maidens
pADAa mulaimEl – over firm bosoms
tugil – the cloth that covers
Like how the
face veil which covers the angry eyes of a frenzied or mad elephant, the
beautiful clothe covers the firm and unwavering bosoms of a young maiden says
this verse. It indeed saves the yougmen from the maiden.
Once again,
we don’t know what to think of the people that visualized vaLLuvar as an
ascetic. In fact, it has been in the nature of all poets, perhaps from the time
poetry took shape and form, to describe the wondrous form and features, of
women, including what we consider
now as private parts, not even surreptitiously, but overtly, in literary
world. Also, from poetry to sculpture,
they all cofirm the dress code of ancient tamil culture was very different from
today and in a lot of ways would be tagged as liberal to provocative by todays’
standards.
“The soft clothe that covers the
beautiful maidens’ bosoms firm and nice,
is like face-veil that covers frenzied elephants’
mad, angry killing eyes”
இன்றெனது குறள்:
பெண்ணின் திமிர்கொங்கை மேலாடை
கொல்லாமல்
கண்மறைக்கும் யானைபடாம் போன்று
peNNin timirkongai mElADai
kollAmal
kaNmaRaikkum yAnaipaDam
pOnRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam