ஏப்ரல் 16, 2015

குறளின் குரல் - 1092

16th April,2015

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
                        (குறள் 1086: தகையணங்குறுத்தல் அதிகாரம்)

கொடும்புருவம் - அவளுடைய வில் போல் வளைந்த புருவம்
கோடா மறைப்பின் - (சினத்தால்) மேலும் புருவம் வளையும்படி நெறிக்காது, ஒளித்தால்
நடுங்கு அஞர் - ஆண்மகன் நடுங்கும்படியாக துன்பத்தினை
செய்யல மன் - செய்யாது
இவள் கண் - இப்பெண்ணுடைய கண்

பெண்ணானவள் தன் கண்ணை இடுக்கி கோபத்தால் பார்க்கும்போது பார்க்கும் ஆணுக்கு, அவளுடைய கண் தெரியாது. ஏற்கனவே வளந்த வில்போன்ற புருவங்கள் மேலும் நெறித்து, அவள் கொள்ளும் சினத்தைக் காட்டுவதால் ஆண் நடுக்குறும் துன்பத்தையே விளைக்கும் அவ்வாறு செய்வதால். அவ்வாறு அவள் செய்வதை மறைப்பின் அவளுடைய கண் நடுக்குறும் துன்பத்தை விளைவிக்காது.
இக்குறளை படிக்கும் விதமாக பொருள் செய்வது சிறிது கடினமே!  எல்லா உரைகளும் ஒரு மழுப்பலான உரையையே தருகின்றன. பரிமேலழகரும், மணக்குடவரும் ஒரே மாதிரியாக, ஆனால், சிறிது குழப்பமாகவே உரை செய்துள்ளார்கள். கொடும் புருவம் என்றதால், அது நெறிப்பதால் சினத்தை வெளிப்படுத்தும் புருவம் என்பது புலனாகிறது. தவிரவும் வில்போன்ற புருவமாயிருத்தால் அது காதலம்பினை தொடுத்து, அன்பினை வெளிப்படுத்தவும் செய்யும்; அல்லது மேலும் நெறித்து தன்னுடைய பொய்க்கோபத்தையோ, அல்லது மெய்யான கோபத்தையோ வெளிப்படுத்த வல்லது. அவ்வாறு அவள் கோபத்தை வெளிப்படுத்த புருவத்தை மேலும் வளைக்காது இருப்பாளாயின், ஒளிப்பாளாயின், அவை ஆண்மகனை நடுக்குறும் துன்பத்தில் ஆழ்த்தாது.

Transliteration:

koDumpuruvam kODA maRaippin naDunganjar
seyyala manivaL kaN

koDumpuruvam – Her bow like bent eyebrows
kODA maRaippin – If does not bend further ( expressing anger false/real )
naDung anjar – For the man to shiver in fear
seyyala man – shall not do
ivaL kaN – her eyes

When a girl  shrinks her eyes in anger, her eyes will not be seen. Her eyebrows are already like the battle-ready bow ready to aim the arrow of love;  Such anger from a girl shall give shivers and pain. When she does not do that, and hides her eyes, such pain shall not be there for the love struck man.

This verse is rather difficult to interpret as it is read. Most interpretations are superficial and Parimelazagar commentary along with MaNakkuDavar are indeed a bit more confusing. The word “koDum puruvam” implies that it is ready and capable of aiming the arrow of love. Those eye-brows while shrinking can express false or real anger and make the love-struck man shiver wondering what it is, in either case. So, only when she does not shrink her eyes a man shall not shiver in pain too.

“Her eyes shall not cause shivering pain, to the brim
 if her bow like long brows dont shrik and hide them”


இன்றெனது குறள்:

வில்லன்ன நீள்நுதல் தான்நெறியாள் கண்செய்யா
கொல்லும் நடுக்குறும் துன்பு  (நுதல் - நெற்றி, புருவம் இரண்டுமாகும்)

villanna nILnudal tAnneRiyAL kaNseyyA
kollum naDukkuRum thunbu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...