15th
April, 2015
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
(குறள் 1085:
தகையணங்குறுத்தல் அதிகாரம்)
கூற்றமோ - கொல்லுகிறதே அதனின் காலனாய் இருக்குமோ?
கண்ணோ - அல்லது என்மீது பாவி என்னைத் துழாவுவதால் கண்ணேதானோ?
பிணையோ - அல்லது மருளுகின்ற இயல்புடைய மானோ?
மடவரல் - பெண்ணாள்
நோக்கம் - என்னை அவள் விழிகொண்டு நோக்குவது
இம்மூன்றும் உடைத்து - இம்மூன்றுமாகவும் இருக்கிறது!
மீண்டும் பெண்ணாள் ஆண்மகனை நோக்குவதை அவன், எவ்வாறு என்று
சிந்தித்து, இம்மூன்றாகவும் இருக்கிறது என்று உணரும் குறள். இதோ அவன் சிந்தனையோட்டம்!
“அவள் என்னைப் பார்ப்பது என்னை கொன்று வருத்த வந்த காலனாய் இருக்குமோ? அன்றி என்னைப்
பரவிப் பார்க்கின்ற அழகு விழிமட்டும்தானா? அன்றி, மருளுகின்ற இயல்புடைய மானோ? இம்மூன்றுமே
அமைந்தால் போல்தான் இருக்கிறது.”
Transliteration:
kURRamO
kaNNO piNaiyO maDavaral
nOkkamim
mUnRum uDaittu
kURRamO –
Is this the death lord that has come to torment?
kaNNO –
Or is just her eye that scans me?
piNaiyO –
Or is it fearful deer?
maDavaral –
This girl
nOkkamim –
when she sees me
mUnRum
uDaittu – I think these three are combined.
Once again, when a girl sees man, this verse says,
how he thinks! Here is what he thinks. “Is she the death lord that has come to
torment me? Or just the eyes that scans
and scales me? Or is it a fearful deer? Looks like it is all three in one!”
“Her
looking makes me wonder if it is all deaths’ gaze
Or
is it just her eyes beaming light? Or a fawns grace?
இன்றெனது குறள்:
விழியோ மருள்மானோ காலனோ பெண்ணாள்
விழிநோக்க யாவுமே காண்
vizhiyO maruLmAnO kAlanO
peNNAL
vizhinOkka yAvumE kAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam