14th
April,2015
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
(குறள் 1084:
தகையணங்குறுத்தல் அதிகாரம்)
கண்டார் - தம்மைக் காண்போருடைய
உயிருண்ணும் - உயிரைக் உண்டுவிடுகிறவை
தோற்றத்தால் - தம்முடைய தோற்றத்திலே
பெண்டகைப் - அப்பெண்ணானவள் நால்வகைப் பண்பு நலன்கள்
பெற்று
பேதைக்கு - எளியவளாயிருப்பவளுக்கு
அமர்த்தன - மாறுப்பட்டு (அவள் தோற்றத்திற்குப் புறம்பாக)
கண் -அமைந்த கண் (ஓரு கண்ணைப் பார்த்தே இப்படி!)
நால்வகைப் பண்பு
நலன்களைப் பெற்று காட்சிக்கு எளியளாய் இருக்கிற அப்பெண்ணின் ஒரு விழியோ, தம்மைப் பார்க்கிறவர்களின்
உயிரை உண்ணுகிற மாறுப்பட்ட (கூறப்பட்டப் பண்பு நலன்களிலிருந்து) கொடிய கூற்றாக இருக்கிறதே
என்று ஆண்மகன் வியப்பதைக் கூறும் குறள்.
காதல் வயப்பட்டால்,
இப்படி உயிர்போகும் உச்சமான சிந்தனையும், பலமுறைகள் தம்மாவி சென்று மீண்டுவருதலும்
இயற்கைபோலும். கண் என்றதால், தலைமகன் அப்பெண்ணின் ஒரு விழிக்கே இத்துணை வலியிருப்பதைக்
கூறுவதை உணரமுடிகிறது. ஒரு விழியைப் பார்ப்பதே இப்படி என்றால் இருவிழிகளை நோக்கினால்
அல்லது நோக்கப்பட்டால் இருமுறை இறப்பதோ?
அமர்த்தல் என்பது
ஒருவருடைய எதிர்பார்க்கப்படுகிற இயல்புக்கு மாறுபடுவதைக் குறிப்பது. பெண்ணைப் பேதை,
தகையுடையவள் என்றெல்லாம் கூறிவிட்டு, அவள் கண்ணாலேயே ஆவியைப் பறிக்கும் திறத்தள் என்பதைச்
சொல்லுகிறது.
Transliteration:
kaNDAr uiriuNNum tORRattAl peNDagaip
pEdaikku amarttana kaN
kaNDAr – Those who see her
uiriuNNum – to eat their lifeforce,
tORRattAl –
in her form
peNDagaip – the girl that looks to have the four
virtuous traits of a girl
pEdaikku – and also is simple in her demeanor
amarttana – but is different to the above traits
and demeanor
kaN – is her eye
A girl that
has the four traits that define a perfect one, and also is simple in demeanor,
with her one eye, when she looks, can cause havoc and cost a persons’ life, the
moment even an eligible man looks at her, which is contrary to her nature,
wonders a man here, in this verse.
For those
that are love-struck, to lose life figuratively like this many times is quite
common and natural. An interesting aspect of this verse is that vaLLuvar says “kaN”,
meaning one eye. If that girls’ one eye can cause havoc to a mans life, imagine
what her pair of eyes would do? Again the costing life can be construed both
ways, amiably (she returns his love) or in disgust ( can burn the man that
looks at her, and she does not like it!)
The word “amarttana”
implies her being different to nature of a virtuous girl, when she looks at a
man who eyes her, either amiably or in disgust.
“Though a girl of all virtues and
innocence, looking at me with her eye
can cause havoc and cost my life – very different
to her nature! Oh my!”
இன்றெனது குறள்:
பண்புடைப் பேதையாயின் கண்ணோகாண்
போருயிர்
உண்ணுந் திறத்ததாம் மற்று
paNbuDaip pEdaiyAyin
kaNNOkAN bOruyir
uNNum thiRattatAm maRRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam