13th
April,2015
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
(குறள் 1083:
தகையணங்குறுத்தல் அதிகாரம்)
பண்டு அறியேன் - முன்பு எனக்குத் தெரியாது
கூற்று என்பதனை - காலன் என்பான் எத்தகையவன் என்று (உயிர்
வாங்கி என்ற கேள்வியைத்தவிர)
இனி அறிந்தேன் - இனிமேல் எனக்குப் புரிந்துவிட்டது
பெண் தகையால் - அது, பெண் தன்னுடைய தகைமையாம் பண்பு நலன்களால்
பேர் அமர்க் - பெரியதாய் போர் புரியும்
கட்டு - அமைவு, (குணநலன்களின் உறுதியே போர் செய்வதாகக்கூறுதல்)
பெண்ணின் தகைமைப் பண்புகளாம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
இவற்றைக் கொண்டதைக் காட்டிப் பெரும் போர் புரியும் அமைவை உடைத்தாளைக் கண்டபிறகே எனக்கும்
முன்பு வெறும் பேச்சளவில் மட்டு அறிந்திருந்த காலன் என்போன் யாரென்றும், அவன் செயல்
என்னவென்று நான் அறிந்தேன். பரிமேலழகர் இதை அழகாக விளக்குகிறார். பெண்ணின் தகைமைக்குணங்கள்
இன்பம் பயப்பனவேயாம் பொதுவாக. ஆனால் காதல் வயப்பட்ட ஒருவனுக்கு அதுவே கொல்லும் கூற்றாகும்.
பெண் தன் தகைமைக் குணங்களோடு இருத்தல், காதல் வயப்பட்ட
ஆடவனுக்கு பெரிய போரினைத் தொடுகின்ற அமைவாக, கட்டுக்கோப்பாகப் படுவதில் வியப்பில்லை.
இதில் கண் என்பது பரிமேலழகர் உரையில் காணப்படும் சேர்ப்பாகவே தெரிகிறது. அவரை வாழ்த்திக்கொண்டும்,
தூற்றிக்கொண்டும் அவருக்குப் பின்வந்த உரையாசிரியகள் பலரும் அவரது அடியை ஒற்றியே பொருள்
செய்திருப்பது வியப்புக்குரியது..! பரிமேலழகர் உரைக்காவது, அவரது இலக்கியக்களில் உள்ள
ஒத்த பாடல்கள் வழிகாட்டியாக இருந்திருக்கலாம். மற்றவர்களுக்கு.. முன் செல்லும் வழிகாட்டி
குருடானால் பின் வருபவர்களுக்கும் பாதை இருளுமா என்ன? இதனாலேயே மாற்றுக்குறள் எழுதும்போது
இரண்டுவிதமாகவும் எழுதியுள்ளேன்.
இக்கருத்தைப் பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள் சிலம்பும்,
கலித்தொகையும், சீவக சிந்தாமணியும், கம்ப இராமாயணமும் அழகாகக் கூறுகின்றன.
“கடுங்கூற்றம்
காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே மடங்கெழுமென் சாயல் மகளா யதுவே” என்று சிலப்பதிகாரமும், “கோமகள் உருவமாய்க்
கூற்றம் போந்தது”, “கண்ணினால் இன்று கண்டாம்
கூற்றினை..” என்று சீவக சிந்தாமணியும் என்று கூறினாலும், கம்பனின் மிதிலைப் படலப்
பாடலொன்று அழகானது.
“வண்ணமேகலைத்
தேரொன்று வாணெடும்
கண்ணி ரண்டு கதிர்முலை தாமிரண்
டுண்ணி வந்த நகையுமுண் டாமெனில்
எண்ணும் கூற்றினுக் கித்தனை வேண்டுமோ?”
Transliteration:
paNDaRiyEn
kURRen badanai iniyaRindEn
peNDagaiyAl
pEramark kaTTu
paND(u)
aRiyEn – I did not know earlier
kURR(u)
enbadanai – how the lord of death was (though have heard he
takes life off)
ini
aRindEn – But, from now on,
I know
peN
tagaiyAl – A girl with her honorable four traits
pEr
amark – can war
kaTTu –
with those beautiful eyes.
The four virtues always exalted by tamil literati as
hallmark of women hood are fearful of shame, credulity (innocence) bashfulness,
and avoiding strangers . Only when I saw a girl filled with these qualities, I came to
know about the existence and the deed of the Lord of death, says vaLLuvar in
this verse, speaking for a man in love. In general, these four traits are
desired in a woman. However for a man in love, these a girl with four traits
seem to be in war with the help the same four and her stance is indeed killing.
Though most commentators follow, ParimElazhagar,
rather blindly to bring a females eyes here, it is not said in the verse.
Perhaps ParimElazhagar took his own liberty of drawing from literary examples
and extrapolated. But the truth is that
a girl with such exalted qualities would not even lift her eyes to look at
others.
There are beautiful lines in SilappadikAram,
Cheevaga ChintAmaNi expressing similar thought. However, Kambar takes the cake
with his beautiful expression in Mithila episode, describing the beauty of
Seetha, through Ramas’ pining. She is a lady with beautiful chariots like hips,
sword like eyes, two shining huge bosoms, a soft smile in her lips and she is
the Lord of Death that I am thinking about always - implying her showing herself and hiding her
beauty as described, kill him . Another interesting aspect of Kambars’ example
is that everything is said in the context of battle field, similar to vaLLuvars’
verse.
“Never
knew the Death-Lord before. Henceforth know
seeing
the woman of restraint and exalted virtues, I do”
இன்றெனது குறள்(கள்):
தன்தகையால் போர்செய்வாள் கண்களைக்
காண்பதற்கு
முன்பறியேன் காலனென்பா னை
tantagaiyAl pOrseivAL
kaNgaLaik kANbadaRku
munbaRiyEn kAlanenbA nai
தன்தகையால் போர்செய்வாள் பேரமைவைக்
காண்பதற்கு
முன்பறியேன் காலனென்பா னை
tantagaiyAl pOrseivAL pEramaivaik
kANbadaRku
munbaRiyEn kAlanenbA nai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam