12th
April,2015
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
(குறள் 1082:
தகையணங்குறுத்தல் அதிகாரம்)
நோக்கினாள் - யான் வனப்புடையப் பாவையயாயிருக்கிறாளே என்று
பார்த்த பெண்
நோக்கெதிர் - அவள் நான் பார்த்ததற்கு எதிராக
நோக்குதல் - என்னைப் பார்ப்பது
தாக்கணங்கு - பார்வையாலேயேப் பார்ப்போரை தாக்கி வீழ்த்த
வல்லவளான அவ்வணங்கு
தானைக் - தன்னோடு ஒரு சேனைப் படையையும்
கொண்டன்னது உடைத்து - கொண்டு வந்த தன்மையைப் போன்றது.
மீண்டும் நயமான
ஒரு குறள். ஒரு தலைமகன் ஒரு பெண்ணை வனப்புடைய
பாவையாய் இருக்கிறாளே என்று பார்க்கப் போக, அவள், அவன் பார்த்ததற்கு எதிராக அவனைப்
பார்த்தது, தன் பார்வையாலேயே பார்ப்போரைத் தாக்கி வீழ்த்தும் வல்லமைக்கொண்ட அவ்வணங்கு,
தன்னோடு ஒரு சேகனைப் படையையும் கொண்டு வந்த தன்மையைப் போன்றிருந்தது. வள்ளுவர் அறிவுறுத்தல்,
எச்சரித்தல், அங்கலாய்த்தல் என்பது போலெல்லாம் குறட்பாக்களை கடந்த இரண்டு பால்களிலும்
எழுதிவிட்டு, இப்போது இரசிப்புத்தன்மையை அழகாக வெளிப்படுத்தும் ஒரு கவிஞனாக உருவெடுத்தது
புலனாகிறது.
Transliteration:
nOkkinAL nOkkeDir nOkkudal tAkkaNangu
tAnaikkoN Danna tuDaiththu
nOkkinAL – The girl I looked at, because she is
beautiful
nOkkeDir – in retaliation to my seeing her
nOkkudal – her seeing me
tAkkaNangu – the beautiful girl that is capable of
killing her one look
tAnaik – with her a battalion
koNDannad uDaiththu – as if she brought that to tackle me!
Once again, a nicely written verse. The verse is
said in first person, as if vaLLuvar himself is saying that. It is applicable
to any man that is in love with a girl. That person would say: “The girl that I
looked at, because of her beauty, saw me in retaliation. She is a girl that can
kill with her one look; the way she saw me was like bringing along with her in
addition, a big battalion against me”, says the man.
After a series of verses thus far in the past two
cantos with the tone of advising, cautioning and sometimes, sounding
frustrated, in the last canto, vaLLuvar seems to emerge as a poert with his
sense of enjoyment of matters of beauty, especially love etc,.
“The
girl I looked at, looked back at me; while her one look can kill
it appeared she was with a battalion to take
care of me and quell”
இன்றெனது குறள்:
பார்வைக்குப் பார்வையால் போர்செயும்
பாவையாள்
சேர்த்தொரு சேனைகொண்டா ளோ?
pArvaikkup pArvaiyAl pOrseyum pAvaiyAL
sErththoru sEnaikoNDA LO?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam