ஏப்ரல் 11, 2015

குறளின் குரல் - 1087

CANTO III – காமத்துப்பால்/இன்பத்துப்பால் - Section on Love/Desire

This canto primarily deals with the relationship between a man and his “lady-love” that which is fundamental to life in the world, and also serves as the basis for the sustenance of earth. The word “kAmA” in mostly understood parlance means, conjugal desire and associated physical union. In an elevated sense it simply means the desire of opposite sexes to be with one another and male-female attraction in any life form.  This canto talks about such attraction in higher beings that are humans.

The word “kAmA” is not to be construed as an ostracized one; but for most ordinary beings, it has come to mean a lowly sense of tickle, titillation. “kAmA” or “Love”, has two aspects that are union and separation. TholkApiyar defines and lists ten compatibility factors between a man and his “lady-love”, where they have to be like each other. The first seven chapters of this canto come under the section of “union”. The first for them will be how a man is distracted by the sight of is “lady-love”.

காமத்துப்பால், ஒரு ஆணும், அவன் காதலியும் உறவில் இணைந்திருப்பதைப்பற்றிய பகுதி. இது வாழ்வியலின் முக்கிய பகுதி, உலகில் உயிர்கள் நிலைத்து இருப்பதற்கு இன்றியமையாத காரணமும் ஆகும். காமம் அல்லது இன்பம் என்ற சொற்களுக்குப் பொதுவாக எல்லோர்க்கும் புரிந்த பொருளாவது, காதல் மற்றும் திருமண உறவும், அதன் கண் விளையும் புணர்ச்சியெனும் உடலுறவில் முடியும் உணர்ச்சிகளின் சங்கமம் ஆகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான  ஈர்ப்பு என்பது எல்லா உயிரினங்களும் விதிக்கப்பட்ட இயற்கையின் நியதி.  காமத்துப்பால், இது மனிதர்களிடையே இருக்கும் ஈர்ப்பைப் பற்றியானது. அதுவும் முறையானதும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுமாகும்.

இது புணர்ச்சி, பிரிவு என்று இரண்டு வகைப்படும். பழந்தமிழ் வழக்கத்தால் களவியல், கற்பியல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. களவியலின் பெயர்க்காரணம் இன்னதென்று தெரியாவிட்டாலும், ஒருவருக்கொருவர் உள்ளத்தையும், உள்ளத்தையும் களவாடிக்கொள்வதால் இருக்கலாம். காதல் என்பது தம்மை அறியாமலும்,பிறர் அறியாமலும் புகுந்துகொள்வதுதானே!

தொல்காப்பியர் திணைகளுக்குரிய மெய்பாடுகளைக் கூறுமிடத்தில், ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒப்பினது வகைகளை இவ்வாறு கூறுவார்.

“பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு,
 உருவு, நிறுத்த, காம வாயில்,
 நிறையே, அருளே, உணர்வொடு, திரு, என
 முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்று பத்து ஒப்புமைகளைத் தலைவனுக்கும் தலைவிக்குமிடையே இருக்க வேண்டியவையாகக் கூறுகிறார்.

கற்பியல் என்பது எப்போதும் காதலில் இணைந்த ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கவேண்டியதை வலியுறுத்துவது ஆனாலும், தலைவனும் தலைவியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்கையிலே கடைபிடிக்க வேண்டிய நெறியாகும்.

காமத்துப்பாலில், முதலில் களவியலில் ஏழு அதிகாரங்களைச் செய்துவிட்டு, கற்பியலில் பதினெட்டு அதிகாரங்களைச் செய்துள்ளார் வள்ளுவர். இனி......

109: (Lovers distraction to his lady-love - தகையணங்குறுத்தல்)

[This chapter though said from from the point of view of love struck male, it is applicable to both him and his ladylove. The chapter is devoted to, how the beauty of the lady and the love that draws towards her, torment her lover]

11th April,2015

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
                        (குறள் 1081: தகையணங்குறுத்தல் அதிகாரம்)

அணங்குகொல் - இவள் மானுடப் பெண்தானா?
ஆய்மயில் கொல்லோ - கொஞ்சும் அழகு கொண்ட மயிலோ?
கனங்குழை மாதர்கொல் - மதிப்புடைய கனமான தொங்கட்டானை அணிந்த தெய்வப்பெண்ணோ?
மாலும் என் நெஞ்சு - என்று மயங்கி சொக்குகிறதே என்னுடைய நெஞ்சம்!

இல்லறத்தை நன்கு நடத்திய வள்ளுவருக்கு ஒரு தவக்கோலத்தைக் கொடுத்துவிட்ட தமிழ் சமூகத்தை என்னவென்று சொல்வது? வள்ளுவர் ஒரு கற்றறிந்து, நாட்டிலே நல்ல இல்லறத்தை நடத்திய குடிமகனாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்பது இன்பத்துப்பாலை வைத்தே சொல்லிவிடலாம். கவிஞர்களுக்கே உரித்தான, அழகியல் உணர்வுகளை வெகுவாகவே கையாண்டிருக்கிறார் வள்ளுவர். காமத்துப்பாலின் முதற்குறளே இதற்கு சான்று எனலாம்.

ஒரு பெண்ணைப் பார்த்து அவரது நெஞ்சம்.. சரி... ஒரு ஆண்மகனின் நெஞ்சம் என்றே கொள்வோமே - அது சொக்கி மயங்குகிறதாம், அவள் மானுடப் பெண்தானா? அல்லது, அழகு கொஞ்சும் மயிலா? அல்லது காதிலே மதிப்பான காதணியாம் தொங்கட்டானை அணிந்து கொண்டிருக்கும் தெய்வப்பெண்ணா? என்று!

இது காதல் வயப்பட்ட ஒரு ஆடவனின் நெஞ்சு மயங்குவதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

Transliteration:

aNangukol Aimayil kollO kanangkuzhai
mAdarkoL mAlumen nenju

aNangukol – Is she a girl of human kind?
Aimayil kollO – or a beautiful peacock?
Kanangkuzhai mAdarkoL – Or is she a goddess, celestial being wearing a rich rings in her ears?
mAlumen nenju – my mind is perplexed lost in her

vaLLuvar must have been a happy family man. Unfortunately the Tamil land has adorned him with an ascetic look! He must have led a successful family life is very evident from the present canto itself. He exhibits amply the aesthetic aspects of poets in this canto. The very first verse of this canto is a proof for that.

Looking at a girl he is in love with (perhaps vAsuki, when he first met her) his mind or in general a love-struck male wonders if that was indeed a girl of human kind? Or is that a beautiful peacock? Or is it a goddess decorated with heavy jewels on here ears?

Only a man so caught in love can think like that and this verse aptly picturizes that.

“Is she a human girl? Or a beautiful peacock or a celestial being?
 with heavy and rich ear jewels? My mind is perplexed  thinking!”


இன்றெனது குறள்:

நெஞ்சிவள் பெண்ணோ கனங்குழை தெய்வமோ
கொஞ்சுமயி லோவெனச்சொக் கும்

nenjivaL peNNO kanangkuzhai deivamO
konjumayi lOvenachchok kum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...